மாதசம்பளம் ரூ.20,000 முதல் ரூ.1.25 லட்சம்.. டிஎன்ஆர்டிபியில் சூப்பர் வேலை.. விண்ணப்பிக்க ரெடியா?
தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரக புத்தாக்க திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிகிரி முடித்தவர்கள் முதல் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் என அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக மாதம் ரூ.1.25 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் (Tamil Nadu Rural Transformation Project Or TNRTP) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் என்பது ஊரக நிறுவனங்களை ஊக்குவித்து கிராம மக்களின் வருவாயை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டதாகும்.
மேலும் நிதியுதவிக்கு வழிவகை செய்தல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியை தான் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது வாழ்ந்து காட்டுவோம் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு புதுமுயற்சியை எடுத்துள்ளது உலக வங்கியின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் 120 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில் மொத்தம் 9 பிரிவுகளில் மொத்தம் 97 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி ப்ராஜெக்ட் எக்ஸ்க்கியூட்டிவ் (என்டர்பிரைஸ் டெவலப்மென்ட்) பணிக்கு 13 பேர், ப்ராஜெக்ட் எக்ஸ்க்கியூட்டிவ் (அக்கவுண்ட்ஸ்) பணிக்கு 18 பேர், ப்ராஜெக்ட் எக்ஸ்க்கியூட்டிவ் (ஸ்கில்ஸ்) பணிக்கு 25 பேர், எங்க் ப்ரோபஷனல் பணிக்கு 30 பேர், மாவட்ட எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர் பணிக்கு 2 பேர், எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர் (அக்கவுண்ட்ஸ் & அட்மின்), எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர்(என்டர்பிரைசஸ் பைனான்ஸ்), எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர் (ஸ்கில்ஸ்) ஆகிய பணிகளுக்கு தலா ஒருவர் மற்றும் பிளாக் டீம் லீடர் பணிக்கு 6 பேர் என மொத்தம் 97 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
ப்ராஜெக்ட் எக்ஸ்க்கியூட்டிவ் (என்டர்பிரைஸ் டெவலப்மென்ட்), ப்ராஜெக்ட் எக்ஸ்க்கியூட்டிவ் (ஸ்கில்ஸ்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். ப்ராஜெக்ட் எக்ஸ்க்கியூட்டிவ் (அக்கவுண்ட்ஸ்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஐசிடபிள்யூஏ, டிகிரி முடித்திருக்க வேண்டும். எங்க் ப்ரோபஷனல், எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர் (அக்கவுண்ட்ஸ் & அட்மின்), எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர்(என்டர்பிரைசஸ் பைனான்ஸ்), எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர் (ஸ்கில்ஸ்) , பிளாக் டீம் லீடர் பணிக்கு மாஸ்டர் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
ப்ராஜெக்ட் எக்ஸ்க்கியூட்டிவ் (என்டர்பிரைஸ் டெவலப்மென்ட்), ப்ராஜெக்ட் எக்ஸ்க்கியூட்டிவ் (ஸ்கில்ஸ்) ப்ராஜெக்ட் எக்ஸ்க்கியூட்டிவ் (அக்கவுண்ட்ஸ்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எங்க் ப்ரோபஷனல் பணிக்கு 28 வயதுக்குள்ளும், மாவட்ட எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர் (அக்கவுண்ட்ஸ் & அட்மின்),எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர்(என்டர்பிரைசஸ் பைனான்ஸ்), எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர் (ஸ்கில்ஸ்) , பிளாக் டீம் லீடர் பணிக்கு 53 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மாத சம்பளம் என்ன?
ப்ராஜெக்ட் எக்ஸ்க்கியூட்டிவ் (என்டர்பிரைஸ் டெவலப்மென்ட்), ப்ராஜெக்ட் எக்ஸ்க்கியூட்டிவ் (ஸ்கில்ஸ்) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். எங்க் ப்ரோபஷனல் பணிக்கு மாதம் ரூ.45 ஆயிரம், மாவட்ட எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர் பணிக்கு மாதம் ரூ. 75 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்படும். எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர் (அக்கவுண்ட்ஸ் & அட்மின்), எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர்(என்டர்பிரைசஸ் பைனான்ஸ்), எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர் (ஸ்கில்ஸ்) பணிக்கு மாதம் ரூ.35 ஆயிரம், பிளாக் டீம் லீடர் பணிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் http://www.tnrtp.org. இணையதளம் மூலம் மார்ச் 2ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications