டி.என்.எஸ்.டி.சியில் வேலை.. 417 பணியிடங்கள்.. டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: தமிழக அரசு பேருந்து போக்குவரத்து கழகத்தில் உள்ள காலியாக உள்ள 417 பணியிடங்களை (பயிற்சி) நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்கள் மண்டல வாரியாக செயல்படுகின்றன. அந்த வகையில், விழுப்புரம், கோவை, நாகர்கோவில், சேலம், எம்.டி.சி சென்னை, தர்மபுரி, திருநெல்வேலி ஆகிய போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 417 பணியிடங்கள் (பயிற்சி) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதிகள், இதர விவரங்களை காணலாம்.

கல்வி தகுதி: மெக்கானிக்கல் என்ஜினியரிங் / ஆட்டோ மொபைல் என்ஜினியரிங் துறையில் டிப்ளமோ அல்லது என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு மட்டும் 335 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிற டிகிரி முடித்தவர்கள் அதாவது, பிஏ/ பி.எஸ்.சி/ பி.காம்,/பிபிஏ/ பிசிஏ ஆகிய பட்டங்களை முடித்தவர்களுக்கு 82 இடங்கள் உள்ளன.
எந்தெந்த போக்குவரத்து கழகங்களில் எத்தனை பணியிடங்கள் என்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு உள்ளன, டிகிரி முடித்தவர்களுக்கு உள்ளன என்ற முழு விவரங்கள் தேர்வு அறிவிப்பாணை பற்றிய லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?: இது ஒரு பயிற்சி பணி மட்டுமே. ஓராண்டு பணி காலத்திற்கு நியமனம் செய்யப்படுவார்கள். ஊதியமாக என்ஜினியரிங் முடித்த அப்ரெண்டிஸ்களுக்கு மாதம் ரூ 9 ஆயிரம் வழங்கப்படும். டெக்னிஷயன் (டிப்ளமோ) முடித்தவர்களுக்க்கு மாதம் ரூ 8 ஆயிரமும் என்ஜினியரிங் அல்லாத பிற பிரிவில் பட்டம் முடித்தவர்களுக்கு ரூ.9 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு முறை எப்படி? டாஸ்க் கொடுக்கப்பட்டு அதன்படிபடையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகவல் அவர்கள் அளிக்கும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும். அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக மெட்ரோபொலிட்டன் டிரன்ஸ்போர்ட் கார்பரஷேன் (MTC) பயிற்சி மையம், குரோம் பேட்டை (MTC Depot II Campus) சென்னை 44 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திற்குசெல்ல வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் http://boat-srp.com/tnstc2023/ என்ற இணையதளத்திற்கு சென்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் வழியாகவே சமர்பிக்க வேண்டும். தேர்வு பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள http://boat-srp.com/wp-content/uploads/2023/09/TNSTC_2023_24_8_Regions_Notification.pdf என்ற இணையதளத்தை கிளிக் செய்து பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 10.10.2023 ஆகும்.












Click it and Unblock the Notifications