அரசு போக்குவரத்து கழகத்தில் ஊதியத்துடன் பயிற்சி.. 1,588 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. விட்றாதீங்க
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. மொத்தம் 1588 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். எனவே தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள். எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகத்தின் வாயிலாக இயக்கப்படுகின்றன. விழுப்புரம், கும்பகோணம், மதுரை, நெல்லை, சேலம், சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் என மண்டல வாரியாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இயக்கப்படும் ஆயிரக்கணக்கான பேருந்துகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். அரசு போக்குவரத்து கழகங்களில் அப்ரெண்டீஸ் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், 2021 முதல் 2025 வரையிலான கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் அப்ரெண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த அப்ரெண்டீஸ் பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* என்ஜினியரிங் கல்வி தகுதி பணியிடங்கள் - 458
* டிப்ளமோ - 561
* பட்டப்படிப்பு - 569
மொத்தம் - 1,588 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
* என்ஜினியரிங், டிப்ளமோ, ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. என்ஜினியரிங் அப்ரெண்டீஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
ஊதியம் எவ்வளவு?
* என்ஜினியரிங் அப்ரெண்டீஸ் (பொறியியல்/தொழில்நுட்பம்) - ₹9,000/-
* டிப்ளமோ பயிற்சியாளர்கள் - ₹8,000/-
* பொறியியல் அல்லாத பட்டதாரி - ₹9,000/-
தேர்வு முறை:
* மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
* விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.10.2025
* ஷார்ட் லிஸ்ட் பட்டியல் வெளியிடும் நாள்: 29.10.2025
சான்றிதழ் சரிபார்ப்பு: திருச்சியில் உள்ள அரசு போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. ஊதியத்துடன் பயிற்சி வழங்கப்படுவதால், சமீபத்தில் பட்டம் முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பாக இது இருக்கும். எனவே தகுதியும் ஆர்வமும் இருந்தால், மறக்காமல் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
IT Jobs: சென்னை டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. மே 29ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
IT Jobs: நாளை இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications