Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் சான்ஸ்.. 10ம் வகுப்பு பாஸா நீங்கள்? தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) சார்பில் மாநிலம் முழுவதும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அண்டை மாநிலங்களுக்கும் அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் தான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய அரசின் என்ஏபிஎஸ் (NAPS) திட்டத்தின் கீழ் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

 TNSTC recruitment for 2023 for Fitter, Wireman and Mechanic Motor vehicle and in Kumbakonam

டிஎன்எஸ்டிசி சார்பில் கும்பகோணம் பிரிவில் 3 பிரிவுகளில் மொத்தம் 125 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் Fitter மற்றும் Mechanic (Motor Vehicle) பணிக்கு தலா 50 பேர், Wireman பணிக்கு 25 பேர் என மொத்தம் 125 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 8 ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இது அப்ரென்டீஸ் வகை பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8,050 வரை உதவித்தொகை வழங்கப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் NAPS இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் மற்றும் சான்று சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் மொத்தம் 25 மாதம் வேலையில் அமர்த்தப்படுவார்கள். இதில் முதல் 6 மாதம் என்பது அடிப்படை பயிற்சி காலமாகவும், அடுத்த 19 மாதம் பணி பயிற்சி காலமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fitter பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் செய்ய Click Here

Mechanic பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் செய்ய Click Here

Wireman பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+