சப் இன்ஸ்பெக்டர் வேலை.. விண்ணப்பதாரர்களுக்கு சர்ப்ரைஸ்! அப்ளை பண்ணாதவங்க இந்த சான்சையும் விட்றாதீங்க
சென்னை: தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் மே 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வம் இருந்தும் விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தமிழக காவல்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்றபடி அவ்வப்போது இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என பல லட்சக்கணக்கான இளைஞர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் தான், கடந்த வாரம் முதல் வார்த்தில் எஸ்.ஐ தேர்வுக்கான அறிவிப்பை சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 10 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள். தேர்வு அறிவிப்பு குறித்த விவரங்களை மீண்டும் ஒருமுறை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1,352 - சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 53 இடங்கள் எஸ்.சி. (ஆதி திராவிடர்கள்), எஸ்.டி (பழங்குடியினர்) வகுப்பினருக்கான பின்னடைவு பணியிடங்கள் ஆகும். எஸ்.ஐ பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
30 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பி.சி., பி.சி முஸ்லிம், எம்.பி.சி. உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். எஸ்.சி, எஸ்டி, 3 ஆம் பாலினத்தவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். ஆதரவற்ற விதவைகளுக்கு 37 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வயது வரம்பு 47 ஆகும். துறை சார்ந்த ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவருக்கு 01.07.2024 - தேதிப்படி 47 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். குறிப்பிட்ட உடற்தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 10 சதவீதம் (ஆண்களுக்கு 7 சதவீதம், பெண்களுக்கு 3 சதவீதம்) ஒதுக்கீடு வழங்கப்படும்.
தேர்வு முறை:
* முதலில் எழுத்து தேர்வு (தமிழ் மொழி பாட தகுதி தேர்வு) - 100 மதிப்பெண்கள்
* முதன்மை எழுத்து தேர்வு - 70 மதிப்பெண்கள்
* உடற்தகுதி தேர்வு -15 மதிப்பெண்கள்
நேர்முகத்தேர்வு Viva-Voce - 10 மதிப்பெண்கள்
சிறப்பு மதிப்பெண்கள் - 5 என மொத்தம் 100 மதிப்பெண்களுக்க்கு தேர்வு நடைபெறும். இதில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க 10 ஆம் தேதி கடைசி நாள்
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொண்ட பிறகு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பொது பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.500 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். டிப்பார்மெண்டல் துறை ரீதியான விண்ணப்பதாரர்கள் ரூ.1000 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கால அவகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 10 ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://tnusrb.tn.gov.in/pdfs/SI(TK,%20AR)%202025%20Notification_n.pdf இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications