எக்ஸாமின்றி சூப்பர் வேலை.. ரூ.30,000 டூ ரூ.1.50 லட்சம் வரை சம்பளம்.. அழைக்கும் தமிழக வனஅனுபவ கழகம்
சென்னை: தமிழ்நாடு வன அனுபவ கழகத்தில் எழுத்து தேர்வு இன்றி மாதம் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரை மாதசம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு வன அனுபவ கழகம் (TNWEC or Tamil Nadu Wilderness Experiences Corporation) என்பது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலாத்துறை திட்டங்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த கழகம் செயல்பட்டு வருகிறது.

இந்த கழகத்தின் அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாடு வன அனுபவ கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தலைமை ஆபரேட்டிங் அதிகாரி: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். மேனேஜ்மென்ட், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், டூரிசம் உள்ளிட்டவற்றில் முதுகலை படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மாதசம்பளமாக ரூ.1.50 லட்சம் கிடைக்கும்.
கம்பெனி செக்ரட்டரி: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். சிஎஸ் (இந்திய கம்பெனி செக்ரட்டி நிறுவனத்தின் உறுப்பினர்) தகுதியுடன் இருக்க வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும்.
பைனான்ஸ் ஆபிசர்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். சிஏ, சிடபிள்யூஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பல் கூறப்பட்டுள்ளது.
அட்மினிஸ்ட்ரேஷன் ஆபிசர்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். எம்பிஏ, மேனேஜ்மென்ட் தொடர்பான படிப்புகளில் முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும்.
அசோசியேட்: அசோசியேட் (டெக்னிக்கல்) பணிக்கு ஒருவரும், அசோசியேட் (பைனான்ஸ்) பணிக்கு ஒருவர் என மொத்தம் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அசோசியேட் (டெக்னிக்கல்) பணிக்கு டூரிசம் அன்ட் ஹாஸ்பிட்டாலிட்டி, எஃகோ டூரிசம், ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் சயின்ஸ் பிரிவுகளில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். அசோசியேட் (பைனான்ஸ்) பணிக்கு பிபிஏ மற்றும் பைனான்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://tnwec.com இணையதளம் சென்று Career என்பதை கிளிக் செய்து டிசம்பர் மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications