Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. திருவள்ளூருக்கு கலெக்டரின் ஸ்வீட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 621 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த தேர்விற்கு கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி மட்டுமே. வயது வரம்பு 01.07.2023 தேதியில் 20 முதல் 30 ஆகும். இந்த தேர்விற்கு tnusrb.tn.gov.in. என்ற இணையதளத்தில் நாளை 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு காவல்துறையில் சேர வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. அதுவம் எஸ்ஐ பணிக்கு சேர வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள்.சட்டம் ஒழுங்கை காக்கும் முக்கிய பொறுப்பு என்பதால் பலரும் கனவுகளுடன் காத்திருக்கிறார்கள். அவர்களின் கனவை நினைவாக்க வாய்ப்பு வந்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் 750 காவல் துணை ஆய்வாளர் பதவி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (டிஎன்யுஎஸ்ஆர்பி) அதிகாரப்பூர்வமாக அறிவத்துள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் கீழ்கண்ட அறிவிப்பினை பாருங்கள்.

மொத்த எஸ்ஐ காலி பணியிடங்கள்: 750

தாலுகா எஸ்ஐ - 366
SI of Police (AR) - 145
SI of Police (TSP) - 110
Station Officer - 129.

மேலே சொன்ன பணியிடங்களில் 191 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Tomorrow is the last day to apply for the post of TN Police Sub-Inspector

மொத்தம் உள்ள 750 இடங்களில் 123 இடங்கள் காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. காவல்துறையினர் போட்டி தேர்வில் வென்றால் பணி கிடைக்கும்.

கல்வி தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு, 3 வருட டிகிரி என்ற அடிப்படையில் படித்திருக்க வேண்டும். அல்லது 10ம் வகுப்பு + 3 டிப்ளமோ+ 2 வருட டிகிரி (அல்லது 3 வருட டிகிரி) என பார்மெட்டில் படித்தவர்கள் தான் விண்ணப்பிக்க முடியும்.

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின் அடிப்படையில் 20 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு: பிசி, எம்பிசி பிரிவினர் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விதவைகள் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

20 சதவீதம் உள்ள டிபார்ட்மெண்ட் (காவல்துறை) கோட்டாவில் 47 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவத்தினர் 47 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, சிறப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு ரூ.1000 செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.6.2023

ஆகஸ்ட் மாதம் எழுத்து தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர்அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் (40%) பெற்றிருக்க வேண்டும்.

20% துறை சார்ந்த விண்ணப்பதாரர்களை பொறுத்தவரை, ஓபன் கோட்டாவில் விண்ணப்பிப்பவர்களுடன் தமிழ் மொழித் தகுதித் தேர்வு பொதுவாக நடத்தப்படும்.

ஓபன் கோட்டா மற்றும் காவல் துறைசார்ந்த இரு பிரிவுகளின் கீழும் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு பொதுவாக நடத்தப்படும் தமிழ் மொழித் தகுதித் தேர்வை ஒருமுறை எழுத வேண்டும்.

முதன்மை எழுத்துத் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் திறந்தநிலைத் தேர்வர்களுக்கு 25 மற்றும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 30 ஆகும். எழுத்து தேர்வு முடிந்த பின்னர் 1:5 என்ற விகிதத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த நிலை தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். உள்ளன. அதேபோல், VivaVoce க்கு அழைக்கப்படும் தேர்வின் போது ல் 1:2 என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதியாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையம், தேர்வு தேதி ஆகியவை குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 621 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த தேர்விற்கு கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி மட்டுமே. வயது வரம்பு 01.07.2023 தேதியில் 20 முதல் 30 ஆகும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 5 வருடங்கள், இதர பிற்படுத்தபபட்ட வகுப்பினருக்கு 2 வருடங்கள். முன்னாள் இராணுவ வீரர்களுக்கு 17 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உண்டு.இந்த தேர்விற்கு tnusrb.tn.gov.in. என்ற இணையதளத்தில் நாளை 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 044-27660250, 6382433046 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+