எதிர்பார்த்த நல்ல செய்தி வந்தாச்சு.. 46000 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு.. நடக்க போகும் நல்ல விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களே நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்தாச்சு.. 46,810 அரசு பள்ளி ஆசிரியர்களே கலந்தாய்வுக்கு ரெடியாகுங்க.. அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், முதுநிலை தலைமை ஆசிரியர்கள் என சுமார் 80 ஆயிரம் பேர் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்ககு கலந்தாய்வு நடைபெறும் தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

jobs teacher job school

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு நடத்துவது வழக்கம். காலியிடங்கள் தேவைகளை பொறுத்து பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு விரும்பிய மாவட்டத்திற்கு போக முடியும்.

2024-25ஆம் கல்வியாண்டில் பணியிட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணிப்பிப்பது கடந்த மே மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், தங்களது எமிஸ் - ஐடி மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி துறை அறிவித்தது.

இதேபோல் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்ந்து உள்ள ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது.

பள்ளிக்கல்வி இயக்ககம் சார்ந்துள்ள மாறுதல் விண்ணப்பங்களை, உயர்நிலை, மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி துறை அறிவித்தது. மேலும் ஆசிரியர்களால் ஒவ்வொரு நாளும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், நிலுவையின்றி உடனடியாக கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்பளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்படட்து. அலுவலர்களால் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு, முழுமையான வடிவில் பிரதி எடுத்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் பள்ளி கல்வி துறை தெரிவித்தது.

பொது மாறுதல் கலந்தாய்விற்காக தேதி நீட்டிக்கப்பட்ட நிலையில் மொத்தம் 82 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம் வந்திருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை இதுபற்றி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க, தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில், 18 ஆயிரத்து 920 விண்ணப்பங்கள் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கும், 9 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும், 5 ஆயிரத்து 814 விண்ணப்பங்கள் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாறுதலுக்கும், 1,640 விண்ணப்பங்கள் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலுக்கும் என மொத்தம் 35 ஆயிரத்து 669 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், 25 ஆயிரத்து 711 விண்ணப்பங்கள் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும், 17 ஆயிரத்து 296 விண்ணப்பங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும், 1,186 விண்ணப்பங்கள் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலுக்கும், 1,452 விண்ணப்பங்கள் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலுக்கும், 176 விண்ணப்பங்கள் உடற்கல்வி இயக்குனர் மாறுதலுக்கும், 989 விண்ணப்பங்கள் இடைநிலை, இதர ஆசிரியர் மாறுதலுக்கும் என மொத்தம் 46 ஆயிரத்து 810 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களிலிருந்து ஆக மொத்தம் 82,479 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டு உள்ளன. தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இருந்து 16,183 விண்ணப்பங்கள் ஒன்றியத்திற்குள் மாறுதலுக்கும் 6,448 விண்ணப்பங்கள் கல்வி மாவட்டத்திற்குள் மாறுதலுக்கும் 6,185 விண்ணப்பங்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கும் 6,853 விண்ணப்பங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கும் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இருந்து 27,750 விண்ணப்பங்கள், மாவட்டத்திற்குள் மாறுதலுக்கும் 19,060 விண்ணப்பங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கும் விண்ணப்பித்துள்ளனர்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிவிப்பின் படி, " கலந்தாய்வுக்க விண்ணப்பம் செய்த ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் ஜூலை மூன்றாம் தேதி வெளியிடப்படும். முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் ஜூலை 4 மற்றும் 5 ம் தேதிகளில் திருத்தம் செய்யலாம். இறுதி முன்னுரிமை பட்டியல் 6ம் தேதி வெளியிடப்படும். 2024-25ம் கல்வியாண்டிற்கு பொது மாறுதல் கலந்தாய்வு காலை 9.30 முதல் மாலை 6‌ மணி வரை நடைபெறும்.

அரசு, நகராட்சி உயர்,மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் , இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் (IEDSS) மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)‌ஜூலை 8 ந் தேதி நடைபெறும்.

அரசு, நகராட்சி உயர்,மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் , இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் (IEDSS) மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஜூலை 9 ந் தேதி நடைபெறும்.

அரசு, நகராட்சிப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) ஜூலை 10 ந் தேதியும், அரசு,நகராட்சிப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஜூலை 11 ந் தேதி முதல் 20 ந் தேதி வரை நடைபெறும்.

அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) ஜூலை 22 ந் தேதியும், அரசு ,நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஜூலை 23 ந் தேதியும், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) ஜூலை 24 ந் தேதியும், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஜூலை 25 ந் தேதி நடைபெறும்.

அரசு, நகராட்சி முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை-1, தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Agriculture) (வருவாய் மாவட்டத்திற்குள்) ஜூலை 27 ந் தேதியும், அரசு,நகராட்சி முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை-1, தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Agriculture) (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஜூலை 27 ந் தேதி முதல் 31 ந் தேதி வரை நடைபெறும் " இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+