தமிழ்நாட்டில் 1,093 அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு
சென்னை: தமிழ்நாட்டில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்திற்கான தமிழ், பொருளாதாரம் உள்ளிட்ட 12 பாடங்களுக்கு நேர்காணல் டிசம்பர் 15 முதல் 19 வரை நடைபெற உள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.
ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்டப் பாடங்களில் விண்ணப்பித்தோருக்கான நேர்காணல் முடிந்து இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ், பொருளாதாரம், புவியியல், வணிகவியல், வணிகவியல் (சி.ஏ.), வணிகவியல் (ஐபி), வணிகவியல் (இ-காம்), தொழில் நிர்வாகம் (பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன்), தொழில் மேலாண்மை (பிசினஸ் மேனேஜ்மென்ட்), பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், உடற் கல்வி ஆகிய 12 பாடங்களுக்கான நேர்காணல் டிசம்பர் 15 முதல் 19 வரை நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதங்கள் கிடைக்கவில்லையென்றாலும், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து இந்தக் கடிதங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பின்போது கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, அதனடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் தேர்வர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பிற பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள jobs.oneindia.com என்ற இணையதளத்தினைப் பார்வையிடுங்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications