சைவம், அசைவம் நல்லா சமைப்பீங்களா.. ஆண், பெண்களுக்கு அருமையான வேலை வாய்ப்பு.. திருச்சியில்!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மூலம் இயங்கும் கல்வி விடுதிகளில் காலியாகவுள்ள 40 சமையலா் பணியிடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: திருச்சி மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலகம் இயங்கும் கல்வி விடுதிகளில் 25 ஆண் சமையலா் பணியிடங்கள், 15 பெண் சமையலா் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு இனச் சுழற்சி மற்றும் இட ஒதுக்கீட்டின் கீழ் தகுதியானோா் தோ்வு செய்யப்படவுள்ளனா். சைவ, அசைவ உணவுகளை தரமாக, சுவையாக சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 18 முதல் 35 வயது, மிகவும் பிற்பட்டோா், சீா்மரபினருக்கு 32 வயது வரை, இதர பிரிவினருக்கு 30 வயது வரை தகுதியாகும்.
அரசு விதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வயது வரம்பு தளா்வு அமலில் உள்ளது. இத்தகைய தகுதியானோா் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, உரிய சான்று நகல்கள் இணைத்து, மாா்பளவு புகைப்படம் இணைத்து மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வரும் பிற்பட்டோா் நலத்துறை அலுவலகத்தில் வரும் 18-ஆம் தேதி மாலை 5.45-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள், முகவரி தவறானவை, திரும்பப் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது அரசு பொறுப்பேற்காது. இந்தப் பணியிடங்களுக்கான தகுதிகள், இதர விவரங்கள், விண்ணப்பம் தொடா்பாக பிற்பட்டோா் நலத்துறை அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications