பொதுத்துறை வங்கியில் வேலை.. மாதம் 93 ஆயிரம் சம்பளம்.. இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ஜாக்பாட்
சென்னை: யூகோ வங்கியில் பொது மற்றும் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பி.இ, பி.டெக் மற்றும் எம்பிஏ, எம்.எஸ்.சி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை 93 ஆயிரம் வரை வழங்கப்படும். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று யூகோ வங்கி (UCO Bank). கடந்த 1943ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கியின் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் தனிநபர், சிறு தொழில், நிறுவனங்களுக்கு வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்குகிறது.

பணியிடங்கள் விவரம்:
தற்போது இந்த வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 173 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
JMGS-I பிரிவில் டிரேட் ஃபைனான்ஸ் ஆபிசர் (30 பணியிடங்கள்), சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (50 பணியிடங்கள்), மற்றும் சாஃப்ட்வேர் டெவலப்பர் (15 பணியிடங்கள்) நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர் (5), டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் (3), சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் (3), மியூரெக்ஸ் டெவலப்பர் (5), ஃபினாகல் டெவலப்பர் (5), கிளவுட் இன்ஜினியர் (3)
AI/ML இன்ஜினியர் (2), டேட்டா அனலிஸ்ட் (2), டேட்டா சயின்டிஸ்ட் (2), சைபர் செக்யூரிட்டி ஆபிசர் (3), மற்றும் டேட்டா பிரைவசி கம்ப்ளையன்ஸ் ஆபிசர் (2) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
MMGS-II பிரிவில் ட்ரெஷரி ஆபிசர் (10), சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (25), டேட்டா அனலிஸ்ட் (3), டேட்டா சயின்டிஸ்ட் (3), மற்றும் டேட்டா இன்ஜினியர் (2) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதியானது மாறுபடும். B.E/B.Tech, M.Sc, MBA, MCA அல்லது CA போன்ற படிப்பினை முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகுதி குறித்து முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
வயது வரம்பு என்ன?
வயது வரம்பைப் பொறுத்தவரை, 2026 பிப்ரவரி 2 ஆம் தேதி நிலவரப்படி, JMGS-I நிலை பதவிகளுக்கு 20 முதல் 30 வயதுக்குள்ளும், MMGS-II நிலை பதவிகளுக்கு 22 முதல் 35 வயதுக்குள்ளும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு (பொது/EWS) 10 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு (SC/ST) 15 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு (OBC) 13 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
சம்பளத்தைப் பொறுத்தவரை, JMGS-I நிலைக்கான சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரையிலும், MMGS-II நிலைக்கான சம்பளம் ரூ.4,820 முதல் ரூ.93,960 வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.ucobank.com/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175/-, மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800/- ஆகும். கட்டணம் ஆன்லைனில் செலுத்தப்பட வேண்டும். ஆன்லைன் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வு தேதிக்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன்னதாக தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here












Click it and Unblock the Notifications