சூப்பர் சான்ஸ்.. டிகிரி, டிப்ளமோ படித்தவரா? ரூ.40,000 வரை சம்பளம்! கப்பல் கட்டும் தளத்தில் வேலை!
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள உடுப்பி கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் டிகிரி, டிப்ளேமா முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கர்நாடகா மாநிலம் மல்பேயில் உடுப்பி கொச்சின் கப்பல் கட்டும் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி சூப்பர்வைசர் பணிக்கு 18 பேர், ஆபிஸ் அசிஸ்டென்ட், பூத் ஆபரேட்டர் பணிக்கு 16 பேர் என மொத்தம் 34 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: சூப்பர்வைசர், ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், ஸ்ட்ரீம் ஆப் என்ஜினியரிங், இன்டஸ்ட்ரியல் சேப்டி என்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இளங்கலை பட்டப்படிப்பில் Commerce, பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், பிசிஏ, சோசியல் வொர்க், பைன் ஆர்ட்ஸ், பெர்பாமிங் ஆர்ட்ஸ், அல்லது ஐடிஐ-யில் வெல்டிங், எலக்ட்ரிஷியன், எலக்ட்ரானிக் மெக்கானிக்கல் படிப்பை முடித்திருக்க வேண்டும். பூத் ஆபரேட்டர் பணிக்கு ஐடிஐ-யில் ஷீட் மெட்டல் வொர்க்கர், எலக்ட்ரிஷியன், பிட்டர், பெயிண்டர் உள்ளிட்ட படிப்புகளை முடித்து அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு: சூப்பர்வைசர் பணிக்கு விண்ணப்பிப்போர் 45 வயதுக்குள்ளும், ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு என்றால் 30 வயதுக்குள்ளும், பூத் ஆபரேட்டர் பணிக்கு என்றால் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது வரையும் தளர்வு வழங்கப்படும்.
மாதசம்பளம்: சூப்பர்வைசர் பணிக்கு மாதம் ரூ.40,650 சம்பளமாக கிடைக்கும். ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.18 ஆயிரம், பூத் ஆபரேட்டர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.22,,170 வரை மாதசம்பளமாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் மாதம் 10ம் தேதிக்குள் www.cochinshipyard.in இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். சூப்பர்வைசர் பணியை பொறுத்தமட்டில் விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தங்களின் பணி அனுபவத்தை நிரூபிக்கும் வகையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு எழுத்து தேர்வு உண்டு. பணிக்கு தேர்வாகும் நபர்கள் 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications