மத்திய அரசு வேலை.. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வெளியிட்ட மெகா அறிவிப்பு.. முழு விவரம்
சென்னை: மத்திய அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 400 காலி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 06.01.2024க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுவேலையில் சேர வேண்டும் ஆசைப்படுவோருக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால், மத்திய அரசு வேலைகளில் நாம் எளிதாக சேர முடியும். அப்படியான ஒரு வாய்ப்பு வந்துள்ளது.
மத்திய அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அலுவலக உதவியாளர், லீகல் ஸ்பெசலிஸ்ட், அக்கவுண்டன்ட்/ பைனான்சியல் ஸ்பெசலிஸ்ட், கம்பனி செக்ரட்ரி, அடாரிஸ், டாக்டர்கள், என்ஜினியர்கள், விவசாய நிபுணர்கள் ஆகிய பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளதாக நோட்டிபிகேசன் வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு வரும் டிசம்பர் 16ம் தேதி தொடங்கி வரும் ஜனவரி 6ம் தேதி விண்ணப்பிக்கலாம்.

வேலை தரும் நிறுவனம்: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்
மொத்த காலிபணியிடங்கள்: 400
வேலை வகை: மத்திய அரசு வேலை
வேலை வாரியாக காலியிடங்கள்:
அலுவலக உதவியாளர்: 300
லீகல் ஸ்பெசலிஸ்ட்: 20
அக்கவுண்டன்ட்/ பைனான்சியல் ஸ்பெசலிஸ்ட்: 24

கம்பனி செக்ரட்ரி: 3
அடாரிஸ் : 3
டாக்டர்கள்: 20
என்ஜினியர்கள்: 22
விவசாய நிபுணர்கள் : 3
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 300 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. செப்டம்பர் 30ம் தேதிக்குள் 21 வயது நிறைவடைந்தவர்களும், 30 வயதிற்குள் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்..

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் உதவியாளர் பணியிடங்களுக்கான ஊதியம்: ரூ.37000 (தோராமயாக)
லீகல் ஸ்பெசலிஸ்ட், அக்கவுண்டன்ட்/ பைனான்சியல் ஸ்பெசலிஸ்ட், கம்பனி செக்ரட்ரி, அடாரிஸ், டாக்டர்கள், என்ஜினியர்கள், விவசாய நிபுணர்கள் ஆகிய பல்வேறு பணியிடங்களுக்கு கல்வி தகுதி தனித்தனியாக உள்ளது. வயது மற்றும் கல்வி தகுதி குறித்த விவரங்களை https://uiic.co.in/en/careers/recruitment என்ற முகவரியில் முழுமையாக பார்க்கலாம்.
விண்ணப்பம் : ஆன்லைனில் https://uiic.co.in/en/careers/recruitment என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் தொடங்கும் நாள்: டிசம்பர் 16ம் தேதி
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 06ம் தேதி
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications