யூனியன் வங்கியில் வேலை.. 500 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்கள் அப்ளை பண்ணலாம்.. இன்றே கடைசி நாள்!
சென்னை: நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
நாட்டின் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்று யூனியன் பேங்க் ஆப் இந்தியா. கடந்த 1919 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. பொதுவாகவே வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்றே வேலை தேடும் இளைஞர்கள் நினைக்கின்றனர். இதற்காக தங்களை தயார் செய்தும் வருகிறார்கள். பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன.

அதுபோக ஒப்பந்த அடிப்படையிலான அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கும் சில வங்கிகள் ஆட்சேர்ப்பு நடத்துகின்றன. அந்த வகையில் யூனியன் வங்கியில் 500 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்
எத்தனை பணியிடங்கள்?: நாட்டில் உள்ள 25 மாநிலங்களில் உள்ள யூனியன் வங்கியில் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 55 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கேரளாவில் 22 பணியிடங்களும், கர்நாடகாவில் 40 பணியிடங்களும், மகாராஷ்டிராவில் 56 பணியிடங்களும், தெலுங்கானாவில் 42, டெல்லி 7, ஆந்திர பிரதேசம் 50, குஜராத் 56 என மொத்தம் 500 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருப்பது அவசியம். குறைந்தபட்ச கல்வி தகுதி ஒரு டிகிரி என்பதால் முதுகலை பட்டம் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்தான்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசின் விதிகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படுகின்றன. இதன்படி, ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் இந்த அப்ரெண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் கிடைக்கும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரு.800ஆகவும், பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரு.600 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.400 கட்டணம் ஆகும்.
தேர்வுமுறை: ஆன்லைனில் தேர்வு நடைபெறும். கொள்குறி வகையில் வினாக்கள் இருக்கும். பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். உள்ளூர் மொழித்திறன் பற்றிய கேள்வியும் இடம் பெற்று இருக்கும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். எனவே ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் இன்றே (17.9.2024) விண்ணப்பித்து விடுங்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக் https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx. செய்யவும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications