பென்ஷன் வாங்குகிறீர்களா.. தேடி வந்த குட் நியூஸ்: பென்ஷன் ஃபண்ட் கட்டணத்தில் மாற்றம்.. பணம் கொட்டும்
சென்னை: ஓய்வுக்காலத்திற்குப் பிறகு கைகொடுக்கும் மிக முக்கியமான முதலீட்டுத் திட்டமான நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS) குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) வெளியிட்டுள்ளது. பி.எஃப்.ஆர்.டி.ஏ (PFRDA) அமைப்பு, பென்ஷன் ஃபண்டுகள் வசூலிக்கும் முதலீட்டு மேலாண்மை கட்டணத்தை (Investment Management Fee - IMF) அதிரடியாக மாற்றியமைத்துள்ளது.

புதிய விதிமுறை எப்போது?
இந்த புதிய கட்டண முறை வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறைக்கு வரவுள்ளது. தற்போதுள்ள கட்டண முறையானது மார்ச் 31, 2026 வரை மட்டுமே செல்லுபடியாகும். இதுவரை அரசுத் துறை மற்றும் அரசு சாரா துறை சந்தாதாரர்களுக்கு இடையே இந்தக் கட்டணத்தில் பெரிய வேறுபாடுகள் இல்லாமல் இருந்தது.
இந்தக் கட்டண முறையை மறுஆய்வு செய்ய, செபி (SEBI) அமைப்பின் முன்னாள் தலைவர் யு.கே. சின்ஹா தலைமையில் ஒரு நிபுணர் குழுவை பி.எஃப்.ஆர்.டி.ஏ அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்களுக்கு என்ன மாற்றம்?
அரசுத் துறை ஊழியர்களைப் பொறுத்தவரை, அவர்கள் 'காம்போசிட் ஸ்கீம்' (Composite Scheme) கீழ் இருந்தாலும் அல்லது 'ஆட்டோ சாய்ஸ்' (Auto Choice), 'ஆக்டிவ் சாய்ஸ்' (Active Choice) போன்ற தனிப்பட்ட முதலீட்டு முறைகளைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், அவர்களுக்கான முதலீட்டு மேலாண்மை கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஸ்லாப் முறை கட்டணங்கள் (Slab-based Structure)
இதன் மூலம் பென்ஷன் ஃபண்டுகள் வசூலிக்கும் முதலீட்டு மேலாண்மை கட்டணத்தை (Investment Management Fee - IMF) அதிரடியாக மாற்றியமைத்துள்ளது. புதிய விதிமுறையின்படி, நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பின் (AUM) அடிப்படையில் கட்டணங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
அரசு சாரா துறை (Non-Government Sector) சந்தாதாரர்களுக்கு 10,000 கோடி ரூபாய் வரையிலான சொத்து மதிப்புக்கு 0.12% கட்டணமும், அதுவே 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செல்லும் போது வெறும் 0.04% என்ற குறைவான கட்டணமும் வசூலிக்கப்படும்.
அதேபோல் அரசுத் துறை (Government Sector) சந்தாதாரர்களுக்கு 10,000 கோடி ரூபாய் வரையிலான சொத்து மதிப்புக்கு 0.09% கட்டணமும், 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செல்லும் போது 0.03% என்ற மிகக் குறைந்த கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பென்ஷன் ஃபண்டுகள் பி.எஃப்.ஆர்.டி.ஏ அமைப்புக்குச் செலுத்த வேண்டிய ஆண்டு கட்டணமான 0.015% என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் புதிய வகைப்பாடு
இன்னொரு முக்கியமான மாற்றமாக, என்.பி.எஸ் திட்டத்தின் கீழ் உள்ள 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் இனி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
அரசு சார்ந்த நிறுவனங்கள் (Government Entities)
இதர சட்டப்பூர்வ நிறுவனங்கள் (Legal Entities)
மத்திய அல்லது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEs & SPSEs) மற்றும் அரசு அமைப்புகள் அனைத்தும் இனி 'அரசு நிறுவனங்கள்' என்றே அழைக்கப்படும். தற்போது கார்ப்பரேட் மாடலில் இருந்தாலும், அரசின் நீட்சியாகச் செயல்படும் அமைப்புகள் இனி 'அரசுத் துறை' (Government Sector) மாடலுக்கு மாற்றப்படும்.
ஓய்வூதியத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையையும், முதலீட்டாளர்களுக்குச் சாதகமான சூழலையும் உருவாக்கவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications