உதவி கமாண்டன்ட் பணி.. டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. யுபிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: மத்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 357 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம், மத்திய அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயரிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியை மேற்கோள்கிறது. நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவில் உள்ள இளைஞர்கள், யுபிஎஸ்சி வெளியிடும் தேர்வு அறிவிப்பினை ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். தற்போது மத்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் விவரம்:
* எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) - 24
* மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) - 204
* மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) - 92
* இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) - 4
* சாஸ்திர சீமா பால் (SSB) - 33 என மொத்தம் 357 உதவி கமாண்டண்ட் பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
கமாண்டண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது பூர்த்தியானவர்களும், ஆகஸ்ட் 1, 2025 நிலவரப்படி 25 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வு உண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் ஆகும். ஓபிசி பிரிவினருக்கு ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவை அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எழுத்து தேர்வு நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வுக்கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். பெண்கள்/ எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை படித்து அறிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 05.03.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.03.2025 ஆகும். விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்; 03.10.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க Click Here












Click it and Unblock the Notifications