மத்திய ஆயுதப் படையில் அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் சான்ஸ்! டிகிரி தகுதி தான்!
சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (UPSC Job), ஆயுத காவல் படையில் கமாண்டண்ட் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 349 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான (யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்பி வருகிறது. அதிகாரமிக்க பதவி, மக்களுக்கு நேரடியாக சேவை செய்யக்கூடிய பொறுப்பு என்பதால் இத்தகைய உயரிய பதவிக்கு செல்ல வேண்டும் என்பது நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான தேர்வர்களின் லட்சியங்களில் ஒன்றாக இருக்கும்.

இதனால் யுபிஎஸ்சி வெளியிடும் தேர்வு அறிவிப்பை தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். சமீபத்தில் 933 பணியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது மத்திய ஆயுத காவல் படையில் கமாண்டண்ட் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்ற விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* உதவி கமாண்டன்ட்கள் (குரூப் ஏ) - 349 பதவிகள் (மொத்தம்)
* பிஎஸ்எப் - 108 பதவிகள்
* சிஆர்பிஎப் - 106 பதவிகள்
* ஐடிபிபி - 12 பதவிகள்
* எஸ் எஸ்பி - 53 பதவிகள்
* சிஐஎஸ்எப் - 70 பதவிகள்
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். 2026 ல் தேர்வு எழுதி பட்டம் பெற இருக்கும் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
* வயது வரம்பை பொறுத்தவரை 12.03.2026 தேதிப்படி 20 வயது நிறைவு பெற்று இருக்க வேண்டும். 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது, ஆகஸ்ட் 2001 க்கு முன்பாகவோ, ஆகஸ்ட் 1 -2006 க்கு பிறகோ பிறந்தவராக இருக்கக் கூடாது.
* எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளை பின்பற்றி வயது வரம்பு சலுகையும் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு, நேரமுகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
* ஆர்வமும் தேவையான கல்வித் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.
* பெண்கள்/எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://upsc.gov.in- என்ற இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்த வேண்டும்.
முக்கியமான நாட்கள்
* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 20.02.2026
* விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 12.03.2026
* தேர்வு நடைபெறும் நாள்: 19.07.2026
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://upsc.gov.in/whats-new/Central%20Armed%20Police%20Forces%20%28ACs%29%20Examination%2C%202026/Exam%20Notification
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications