12 ஆம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா.. பாதுகாப்பு அகடமியில் வேலை! யுபிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: தேசிய பாதுகாப்பு அகடமியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி, வயது வரம்பு என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய அரசில் உள்ள மிக முக்கியமான பணிகளுக்கு யுபிஎஸ்சி எனப்படும் குடிமைப்பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வுகளை யுபிஎஸ்சி ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

அந்த வகையில் தேசிய பாதுகாப்பு அகடமியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி, வயது வரம்பு என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..
காலிப்பணியிடங்கள் விவரம்:
தேசிய பாதுகாப்பு அகடமி (ராணுவம்) - 208 பணியிடங்கள் (10 பெண்கள் உள்பட)
தேசிய பாதுகாப்பு அகடமி (கடற்படை) - 42 பணியிடங்கள்- 06 பெண்கள்
தேசிய பாதுகாப்பு அகடமி (விமானப்படை) - 92 பணியிடங்கள்
பொது பணி (டெக்னிக்கல்)-18
தரைப்பணி (டெக்னிக்கல் அல்லாத பிரிவு) - 10 பணியிடங்கள்
கடற்படை அகடமி - 34 பணியிடங்கள் என மொத்தம் 404 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விமானப்படை மற்றும் கடற்படைக்கு 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணித பாடங்களை தேர்ந்தெடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: திருமணம் ஆகாத ஆண் / பெண் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் 2006-ல் இருந்து 2009-க்குள் பிறந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, 4-6-2024 அன்றைய தேதிப்படி 2-1-2006-க்கு முன்போ, 1-1-2009-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது. இது குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு ஆகியவை நடைபெறும். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவர்கள். எழுத்து தேர்வை பொறுத்தவரை நாடு முழுக்க முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, வேலூர், திருச்சி மற்றும் புதுவை ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ் டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. https://upsc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 04.06.2024- கடைசி நாளாகும்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 01.09.2024-ஆகும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://upsc.gov.in/sites/default/files/Notif-NDA-II-2024-engl-150524F.pdf என்ற இணையதளத்தை பார்வையிடவும். விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை நன்கு படித்துக்கொள்ளவும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications