அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு 2025.. வேலூர் டூ தேனிக்கு நாளை கடைசி நாள்.. விண்ணப்பிப்பது எப்படி?
வேலூர்: நாட்டில் உள்ள இளைஞர்கள் பலர் ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்காக அக்னிவீர் திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டு காலத்திற்கு ராணுவத்தில் பணியாற்ற முடியும். பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலூர் முதல் தேனி வரை 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று வேலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இந்தியா ராணுவத்தில் இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக அக்னிவீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10ம் வகுப்பு படித்த இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.இந்த திட்டத்தின்படி ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவது கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது.

கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை தேனி, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
1.6 கி.மீ. பரிசோதனைக்கான ஓட்ட நேரம் 5 நிமிடம் 45 விநாடிகளிலிருந்து, 6 நிமிடம் 15 விநாடிகளாக இந்த முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. என்.சி.சி. சான்றிதழ், ஐடிஐ, டிப்ளமோ படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். நுழைவுத்தோ்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.
முதலில் இணைய வழி பொதுத் தோ்வு நடைபெற உள்து. இதன் பின்னா், உடல் தகுதித் தோ்வு நடைபெறும். தோ்வு தேதிகள் விரைவில் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது குறித்து வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்ட அறிக்கையில், "இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் தேர்வில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க 17½ வயது முதல் 21 வயது நிரம்பிய 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞராக இருக்க வேண்டும். ஐ.டி.ஐ., டிப்ளமோ, என்.சி.சி. தகுதி பெற்ற இளைஞர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் உள்ளன. இதற்கு நாளை (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். வருகிற ஜூன் மாதம் அதற்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அதிக அளவில் இந்திய ராணுவ ஆட்சேர்ப்புக்கான முகாமில் பங்கு பெற்று ராணுவ பணிகளில் பணிவாய்ப்பு பெற வேண்டும்" இவ்வாறு வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்து உள்ளார்.
2025 ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு : மார்ச் 11 அன்று வெளியானது
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 10, 2025
மொத்த காலியிடங்கள்: 25,000
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலம்
கூடுதல் விவரங்கள்: joinindianarmy.nic.in
அக்னிவீர் திட்டம்: மத்திய அரசின் திட்டம்
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications