10ம் வகுப்பு போதும்! வேலூர் சிம்கோவில் அசத்தலான வாய்ப்பு.. கைநிறைய சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க!
வேலூர்: வேலூரில் செயல்பட்டு வரும் சிம்கோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் ரூ.22 வரை சம்பளத்தில் பணியை பெற முடியும்.
வேலூரில் சிம்கோ எனும் தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் சிம்கோ அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனைகள் இயங்குகின்றன.

இந்த மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
வேலூரில் இயங்கி வரும் சிம்கோ நிறுவனத்தின் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனைகளில் தற்போது ஆயுஷ் தெரபிஸ்ட் பணி பிரிவில் 12 காலியிடங்கள் உள்ளன. 12ம் வகுப்பு முடித்து தெரபிஸ்ட் பணியில் 5 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறைந்தபட்சம் 22 வயதும், அதிகபட்சம் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 29.08.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் மத்திய அரசு விதிகளின்படி வயது தளர்வும் அளிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.12 ஆயிரமும், அதிகபட்சமாக மாதம் ரூ.22 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் https://simcoagri.com/our-career.html அதிகாரப்பூர்வ இணையதளத்தல் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ‛‛Managing Director, South India Multi-State Agriculture Co-operative Society Ltd, Town Hall Campus, Near old Bus stand, Vellore - 632 004'' என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பும்போது கல்வி சான்று, தொழில்நுட்ப தகுதி சான்று, முன் அனுபவ சான்று, சாதி சான்று நகல்களில் சுயசான்றொப்பபமிட்டு இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பம் என்பது 31.08.2023 மாலை 4.30 மணிக்குள் மேற்கூறிய முகவரிக்கு கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு் விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்க்காணல் தேதி விபரங்கள் பிறகு அறிவிக்கப்படும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய Click Here












Click it and Unblock the Notifications