ரூ.6.5 லட்சம் சம்பளம்.. பிரபல ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. அக்.,3 கடைசி நாள்.. சென்னையிலும் பணி
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமாக உள்ள விர்ச்சுசா(Virtusa)வில் இருந்து சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் சாப்ட்வேர் டெஸ்ட்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.5 லட்சம் முல் ரூ.6.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதோடு சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே உள்ளிட்ட 4 இடங்களில் நியமனம் செய்யப்படுகின்றனர்.
Virtusa ஐடி நிறுவனத்தில் இருந்து Engineer first Neural Hackathon 2025 என்ற பெயரில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 2 பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

அதன்படி சாப்ட்வேர் இன்ஜினியர் (Software Engineer) மற்றும் சாப்ட்வேர் டெஸ்ட்டர் (Software Tester) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யவோர் 10 மற்றும் பிளஸ் 2வில் 65 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், பிஇ, பிடெக் பிரிவில் இன்பர்மேஷன் டெக்னாலஜி, இசிஇ, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியர் அல்லது தொடர்புடைய பிரிவில் அதாவது டேட்டா சயின்ஸ், ஏஐ/எம்எல், சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட பிரிவுகளில் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
மேலும் சாப்ட்வேர் இன்ஜினியர் பணியை விரும்புவோருக்கு டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ், ஓஓபிஎஸ் கான்செப்ட்ஸ், ஓஎஸ் - ஜெனரல் கான்செப்ட்ஸ், மைஎஸ்க்யூஎல் - பேசிக்ஸ், எஸ்க்யூஎ்லமைஎஸ்க்யூஎல் - ஜாயின்ஸ், மைஎஸ்குஎல் - Subqueries, Pseudocode - Basics & Recursion, கோர் ஜாவா தெரிந்திருக்க வேண்டும்.
சாப்ட்வேர் டெஸ்ட்டர் பணிக்கு பைத்தான், ஓஓபிஎஸ் கான்செப்ட்ஸ், ஓஎஸ் - ஜெனரல் கான்செப்ட்ஸ், மைஎஸ்க்யூஎல் - பேசிக்ஸ், எஸ்க்யூஎ்லமைஎஸ்க்யூஎல் - ஜாயின்ஸ், மைஎஸ்குஎல் - Subqueries, செலினியம் ஆட்டோமேஷன், கோர் ஜாவா, மேனுவல் டெஸ்ட்டிங் (ஐஎஸ்டிக்யூபி) தெரிந்திருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சம்பளம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.6.5 லட்சம் வரை வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய அக்டோபர் 3ம் தேதி கடைசி நாளாகும். தேர்வாகும் நபர்கள் 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் புனேவில் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
மொத்தம் 4 வகைகளில் இண்டர்வியூ இருக்கும். ரவுண்ட் 1ல் டெக்னிக்கல் அசஸ்மென்ட் + ஸ்பீச்எக்ஸ் (கம்யூனிகேஷன் ரவுண்ட்) முறையில் இருக்கும். 2வது ரவுண்ட்டில் கோடிங் அசஸ்மென்ட் இருக்கும். ரவுண்ட் 3ல் டெக்னிக்கல் + கம்யூனிகேஷன் இன்டர்வியூ நடக்கும். 4வது ரவுண்ட்டாக எச்ஆர் டிஸ்கஷன் இருக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications