குளுகுளு கோவையில் சப்போர்ட் இன்ஜினியர் வேலை.. அழைக்கும் பிரபல நிறுவனம்.. செம வாய்ப்பு
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் பிரபல நிறுவனத்தில் சப்போர்ட் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Vontier என்ற நிறுவனம் என்பது சென்சார்ஸ், ஃபீல்ட் பேமமெண்ட் ஹார்டுவேர், ரிமோட் மேனேஜ்மென்ட் மற்றம் வொர்க்ஃப்ளோ சாப்ட்வேர், வாகன டிராக்கிங் மற்றும் ஃப்ளிட் மேனேஜ்மென்ட் சாப்ட்வேர் தீர்வுகளை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் கோவையில் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி Vontier நிறுவனத்தில் சப்போர்ட் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் அல்லது தொடர்புடைய துறையில் என்ஜினியரிங், டிகிரி முடித்திருக்க வேண்டும்.
மேலம் எலக்ட்ரானிக்ஸ் ம்றும் எலக்ட்ரிக்கல் சர்க்யூட், காம்போனென்ட்ஸ் மற்றும் சிஸ்டம்ஸ் குறித்து நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். Schematics Diagram தெரிந்திருக்க வேண்டும். மல்டிமீட்டர், ஆசிலோஸ்கோப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். டெஸ்ட்டிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
கம்ப்யூட்டரில் எம்எஸ் வேர்ட், எக்ஸ், பிபிடி, வேர்ட் உள்ளிட்டவற்றில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். அதோடு தொடர்புடைய துறையில் 0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பதால் மிஸ் செய்யாதீங்க.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications