3 பிரிவுகளில் காலியிடங்கள்.. நவம்பர் 18, 19ல் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் நிறுவனம் சார்பில் செங்கல்பட்டில் நவம்பர் 18, நவம்பர் 19 என 2 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. மொத்தம் 3 பிரிவில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரியில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் (HCL or HCL Technologies) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

it jobs job

அதன்படி தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் அசோசியேட் (Associate), அனலிஸ்ட் (Analyst), டீம் லீட் (Team Lead) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் அசோசியேட்/ அனலிஸ்ட் பணிக்கு குறைந்தபட்சம் 2 முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மாறாக டீம் லீட் பணிக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதேபோல் 3 பணிகளுக்கும் கம்ப்யூட்டர் அறிவு நன்கு இருக்க வேண்டும். எம்எஸ் ஆஃபிஸில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும்.அதேபோல் டீட்டெயில் ஓரியண்டட் மற்றும் ரிசல்ட் டிரைவன் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். இதுதவிர 3 வகையான பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கான பொறுப்புகள் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்து.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் நைட் ஷிப்ட்டில் பணியாற்ற வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் உடனடியாக அல்லது ஒரு மாத நோட்டீஸ் பிரியட் இடைவெளியில் பணியில் சேர வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இந்த பணிகளுக்கான இண்டர்வியூ என்பது நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நாவலூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நடைபெற உள்ளது.

அதாவது HCL - ETA 1 - Village and Panchyat, ETA - Techno Park, Special Economist Zone 33 Rajiv Gandhi Salai, Navallur Taluk, Chengalpattu, Tamil Nadu 603103 என்ற முகவரியில் இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரியில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+