சென்னையில் உள்ள அற்புதமான தொழில் வாய்ப்புகள்.. கோடீஸ்வரன் ஆக்கும் சுய தொழில்கள் என்னென்ன?
சென்னை: இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை தேடுகிறார்கள். கிடைக்கும் வேலையை செய்துதான் பலர் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். சென்னையில் சொந்த தொழில் தொடங்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அப்படியான வாய்ப்புகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
சென்னையில் வேலைக்கு போய் வாழ்க்கையை நடத்துவது அவ்வளவு எளிதானது இல்லை. லட்சங்களில் சம்பளம் வாங்குவோருக்கு வாழ்க்கை சுகமாகவும், ஆயிரங்களில் சம்பளங்கள் வாங்குவோருக்கும் சுமையாகவும் இருக்கிறது. சென்னையில் வேலைக்கு போய் சம்பாதிப்பதை விட, சொந்த தொழில் செய்து சம்பாதிப்பவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் பெரிய அளவில் மாற்றம் வரும்.

சென்னையில் தற்போதைய நிலையில் உள்ள நல்ல தொழில் வாய்ப்புகள் சிலவற்றை இப்போது பார்ப்போம். சென்னையை பொறுத்தவரை கோடிக்கணக்கான மக்கள் வாழும் நகரம் என்பதால், இங்கு ஓட்டல் தொழில் சிறப்பாக இருக்கும். சிறிய உணவங்கள், பிரியாணி கடைகள் பெரிய அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தை பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு உணவு மீது அதிக ஆர்வம் இருந்தால் ஓட்டல் தொழில் , உணவகம் தொழில் ஆரம்பிக்கலாம். கையேந்தி பவனோ, சிறிய உணவகமோ, தரமாகவும், நல்ல விலையிலும் கொடுத்தால் பெரிய முன்னேற்றம் அடையலாம்.
ஆனால் உணவகம் தொழிலுக்கு பொறுமையும், சகிப்பு தன்மையும் அவசியம். அகலக்கால் வைக்காமல் தொழில் நுணுக்கங்களை கற்று சரியாக செய்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். மற்றவர்கள் ஓட்டல் தொழிலை நடத்த முடியாமல் சில மாதங்களிலேயே மூடிவிட்டு செல்கிறார்கள்.
உணவகம்: ஓட்டல் தொழிலுக்கு அடுத்தபடியாக டீக்கடை சென்னையில் நல்ல தொழில் வாய்ப்பாக இருக்கிறது. வேறுமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் இங்கு பேக்கரி மற்றும் டீக்கடைகளை தரமாக வைத்து வெற்றியும் பெற்றுவிட்டார்கள். நம்மவர்கள் தரத்தையும், சுகாதாரத்தையும் அதிகம் விரும்புபவர்கள் அப்படி இருந்தால் எங்கிருந்தாலும் தேடி வந்து சாப்பிடுவார்கள். எனவே டீக்கடையும் சென்னையில் வெற்றிகரமான தொழில் ஆக இருக்கும். ஆனால் கவனமும், பொறுமையும், சரியான வழிமுறையும் அவசியம். இல்லாவிட்டால் டீக்கடை தொழில் நஷ்டத்தையே தரும்.
பேன்சி ஸ்டோர்: சென்னையில் பேன்சி ஸ்டோர் தொழில் நன்றாக கைகொடுக்கும். ஆனால் அந்த கடை எங்கு அதிகம் இல்லை என்பதை கண்டுபிடித்து சரியான இடத்தில் வைக்க வேண்டும். பேன்சி ஸ்டோர்கள் சென்னையில் அதிகஅளவு இல்லை. தேவையான இடங்கள் எவை எவை என்பதை கண்டுபிடித்து வைத்தால் சிறப்பான வெற்றியை அடையலாம்.
மளிகை மற்றும் காய்கறி கடைகள்: மளிகை கடைகள் சில புதிதாக வளரும் பகுதிகளில் வைக்கலாம். புதிதாக வளரும் பகுதிகளில் எங்கெல்லாம் தேவை என்பதை கண்டுபிடித்து வைப்பவர்கள் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சரியான இடத்தில் மளிகை கடைகளை வைத்து முன்னேற்றம் அடைபவர்களும் இருக்கிறார்கள். காய்கறி கடைகளும் சென்னையில் பல இடங்களில் வைக்க வேண்டிய நிலை உள்ளது. புதிதாக வளரும் பகுதிகளை அடையாளம் கண்டு வைத்தால் வெற்றி பெறலாம்.
டெய்லரிங் தொழில் : டெய்லரிங் தொழில் சென்னையில் உள்ளவர்களுக்கு நன்றாகவே கைகொடுக்கும். சமூக வலைதளம் மூலம் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு திறமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்கள் திருப்தி அடைய வைத்தால் மக்கள் தேடி வருவார்கள். அழகு நிலையங்கள் சென்னையில் பலஇடங்களில் அழகு நிலையங்கள் இல்லை. சரியான இடத்தில் கண்டுபிடித்து வைத்தால் பெரிய அளவில் முன்னேறலாம். பைக் மெக்கானிக், பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்றோருக்கும் சென்னையில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களும் சுய தொழில் செய்யலாம்.
-
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications