கட்டிடக் கலை படிப்பு! கை நிறைய சம்பளத்துடன் வேலை! B.Arch படிப்பில் சேர என்னென்ன தகுதிகள் தேவை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்டிடக் கலை எனப்படும் B.Arch படிப்பை படிக்க விரும்புகிறீர்களா? எப்படி படிக்கலாம், இந்த படிப்பில் சேர பிளஸ் 2வில் என்ன மதிப்பெண்கள் தேவை என்பதை பார்க்கலாம்.

இதுகுறித்து கட்டட வடிவமைப்பாளர் மற்றும் உதவி பேராசிரியை நிவேதா வேலன் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேகமாக அளித்த கட்டுரையில் கூறியிருப்பதாவது: "கட்டிடக்கலை என்பது கட்டிடங்களை வடிவமைத்து கட்டும் நடைமுறையாகும். இது ஒரு கலை வடிவம் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு துறையில் அதிகரித்து வரும் தேவை காரணமாக, கட்டிடக்கலை பட்டம் பெற்ற பட்டதாரிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது.

education b arch

"சிறு வயதிலிருந்தே வரைதல், வடிவமைத்தல் மற்றும் புதிய கலைகளை கற்றுக்கொள்வது அல்லது 3D மாடலிங், அனிமேஷன் ஆகியவை உங்களை கவருமானால் இது உங்களுக்கான ஏற்ற துறை என்றே சொல்லலாம் . நான் உயர்நிலை பள்ளியில் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்தேன் கணினி அறிவியல் தேர்ந்தெடுத்தவர்களும் கட்டிடக்கலை படிப்பில் (Bachelor of Architecture) சேரலாம். " என்கிறார் சிக்மா கட்டிடக்கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஜனகிரி.

கட்டிடக் கலையில் பட்டப்படிப்பை முடித்தவுடன், குடியிருப்பு, வணிக கட்டிடங்கள் மட்டுமின்றி உள்துறை வடிவமைப்பு என பல தனியார் தொழில் வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி இந்தியாவில் ரயில்வே துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல், நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனங்கள், பொதுப்பணித் துறைகளில், தொல்லியல் துறை வாய்ப்புகள் இருந்தும் ஆள் பற்றாக்குறையால் காலி பணியிடங்கள் உள்ளன. தன்னிச்சையாகவும் நிறுவனம் தொடங்கி கட்டிடக் கலை வடிவமைப்பாளராக வேலை செய்யலாம். இதில் லாபம் அதிகம் அதுமட்டுமின்றி குறுகிய காலத்திலேயே வளர்ச்சியை அடையலாம்.

நீங்கள் கட்டிடக் கலை படிப்பை தேர்ந்தெடுக்க கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய காரணங்கள் சில உள்ளன. கட்டிடக் கலைஞராக மாற பல வழிகள் உள்ளன. முதலில் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து கட்டிடக்கலையில் (B.Arch) தொழில்முறை பட்டம் பெறுவது மிகவும் பொதுவான பாதை. கட்டிடக் கலைஞர்கள் இளங்கலை பட்டம் பெற்றதும் வேளையில் சேரலாம் அல்லது முதுகலை பட்டம் , முனைவர் பட்ட படிப்பைத் தொடரலாம் அல்லது அவர்கள் தங்கள் அறிவையும் நிபுணத்துவத்தையும் மேம்படுத்த ஆராய்ச்சி திட்டங்களில் பங்கேற்கலாம்.

education b arch

அங்குள்ள பலர் கட்டிடக் கலைத் துறையில் கற்பிக்கப்படும் தனித்துவமான கலைகள் அணுகுமுறைகள் படைப்பாற்றலை மேன்படுத்த ஊக்குவிப்பதால் இத்துறை மாணவர்களை கவர்ந்துள்ளது. இருப்பினும், B.Arch பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியாதது என்னவென்றால், கட்டிடங்களை வரைவது மற்றும் உட்புறங்களை வடிவமைப்பதை விட கட்டிடக்கலை மிகவும் விரிவானது.

கட்டிட கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு என்பது கட்டிடக்கலையின் கலை மற்றும் அறிவியலாகும். இயற்பியல், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றின் புரிதல் தனித்துவமான உபயோகம் உள்ள நல்ல வடிவமைப்பை உருவாக்க உதவும்.

education b arch

"கட்டிடக்கலை கற்பிக்கப்படும் விதம் வழக்கமான ஒன்று இல்லை. பொதுவாக, பெரும்பாலான இளங்கலை படிப்புகளில், நீங்கள் ஒரு படிப்பைப் படிக்கிறீர்கள், சில ஆய்வக (lab) வகுப்புகளில் கலந்துகொள்கிறீர்கள், தேர்வுகளை வழங்குகிறீர்கள் - இங்கே அப்படி இல்லை. கட்டிடக்கலை என்பது ஒரு வாழ்க்கை முறை. இந்த துறையில் நீங்கள் சாதிக்க வேண்டுமானால், கடுமையான உழைப்பும் புத்திசாலித்தனமான முடிவுகளையும் எடுக்க பழகிக்கொள்ள வேண்டும்" என்கிறார் சிக்மா கட்டிடக்கலை கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் ஜேம்ஸ் வில்சன்.

கட்டிடக்கலை படிக்க விரும்புவோருக்கு அவர் மேலும் பேசுகையில் "முதுகலைப் பட்டம் பெற முயற்சிக்க வேண்டும். இந்த முதலீடு உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும். மாணவர்கள் B.arch இல் எப்படி நுழைய வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலாக அமைவது 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான அறிவியல் பிரிவில் (இயற்பியல், வேதியியல், கணிதம்) படித்தவர்கள் B.Arch க்கு விண்ணப்பிக்கலாம்.

education b arch

B.Arch சேர்க்கை செயல்முறையின் போது 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் பெற்ற மதிப்பெண்களும் கருத்தில் கொள்ளப்படும். நீங்கள் B.Archக்கு பயில 45 கட் ஆப் எடுத்திருந்தாலே போதுமானது. இந்தியாவில் உரிமம் பெற்ற கட்டிடக் கலைஞராக ஆவதற்கு, கட்டிடக்கலை கவுன்சில் (COA) அங்கீகரித்த கல்லூரியில் இளங்கலை கட்டிடக்கலை (B.Arch) பட்டப்படிப்பை முடிக்க வேண்டும். பட்டப்படிப்பை முடித்த பிறகு, பட்டதாரிகள் இந்தியாவில் கட்டிடக்கலையை சட்டப்பூர்வமாக பயிற்சி செய்ய கட்டிடக்கலை கவுன்சில் COA (Council Of Architecture) இல் பதிவு செய்ய வேண்டும். மேற்கூறிய தகவல்களைப் பரிசீலித்தால், இந்தியாவில், கட்டிடக் கலைஞர்களின் குறிப்பிடத்தக்க தேவை உள்ளது, நல்ல ஊதியம் ஈட்டும் தொழில்துறையாக விளங்குகிறது என நிவேதா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+