Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜப்பானில் வேலைக்கு போனால் இவ்வளவு சலுகைகளா? தொழிலாளர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ஜப்பானிய கம்பெனிகளில் வேலை எப்படி இருக்கும், அங்கு முதலாளி முதல் கடை நிலை தொழிலாளர்கள் வரை எப்படி வேலை செய்வார்கள், அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை, தொழிற்சங்கங்களின் செயல்பாடு, வேலை நேரம் உள்பட பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவரான கணேஷ். இவர் ஜப்பான் தொடர்பான பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார். அதனை பார்ப்போம்.

ஜப்பானிய கம்பெனி வேலையில் என்னோட ஒரு நாள்... காலையில் 8-மணிக்கு வேலை தொடங்கும். கம்பெனி உள்ளே நுழையும் போதே ID கார்டு பஞ்ச் பண்ண வேண்டும். 10 நிமிடங்கள் முன்னாடியே போயிட்டு யூனிஃபார்ம் போட வேண்டும். கம்பெனியோட கிளை மேலாளார், R&D தலைவர், துறைத்தலைவர் முதற்கொண்டு ஒப்பந்தப் பணியாளர்கள் வரை ஒரே அறையில் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட லாக்கரில் இருந்து கம்பெனி சீருடையை எடுத்து போட்டுக்கணும். எல்லாருக்கும் ஒரே மாதிரி சீருடை தான். அனைவரும் சமம்.

jobs job japan

எல்லாரும் எல்லார் முன்னாடியும் ஜட்டி பனியனோட அங்கயே தான் உடை மாத்திக்கணும். அப்பறம் நம்ம அறைக்கு முன்னாடி உள்ள டைம் ரெக்கார்டர்ல நம்ம ID ஐ பஞ்ச் பண்ண வேண்டும்.அடுத்து சரியா 8 மணிக்கு மணி அடிக்கும். 4 நிமிசம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கு ரேடியோ தைசோ னு பெயர். அப்பறம் 10 நிமிசம் காலை மீட்டிங். அன்றைக்கு பணியாளர்களுக்கு சொல்ல வேண்டிய தகவல், மீட்டிங் உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்து கொண்டப்பின் உறுதி மொழி எடுக்க வேண்டும்.

பாதுகாப்பே முக்கியம், கவனமா இருப்பேன், வேலையை நேரத்துக்கு முடிப்பேன், வேலையில் கவனமாக இருப்பேன், சாலையில் வாகனத்தை பாதுகாப்பாக இயக்குவேன் என்று ஒரு பட்டியல் இருக்கும். அதில் இருந்து இரண்டு உறுதிமொழிகளை ஒரு நாளைக்கு ஒருவர் என சுத்தலில் போகும்.

அடுத்து வாரத்தில் இரண்டு நாள் நம்ம அறைகளை நாம சுத்தம் செய்ய வேண்டும். மீதி இருக்கின்றன மூன்று நாளில், ஒரு நாள் சாலை பாதுகாப்பு, ஒரு நாள் லேப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி என 5 நிமிசம் போகும். இப்படியாக காலையில் அரை மணி நேரம் போய்விடும்.

அடுத்து அவங்கவங்க வேலையை பார்க்கலாம். மதிய உணவுக்கு முன் டீ பிரேக் 10 நிமிசம் எடுத்துக்கலாம். இதுல புகைப்பிடிப்பவர்கள் அவங்க விருப்பம் போல அப்பப்ப புடிச்சிட்டு வருவாங்க. சரியா 12 மணிக்கு மணி அடிக்கும், மதிய உணவுக்கு 1 மணி நேரம் உணவு இடைவேளை. பலர் சாப்பிடுவாங்க. சிலர் சாப்பிட மாட்ட்டாங்க. பெரும்பாலும் அரை மணிநேரம் தூங்குவாங்க. வேலைக்கு தயாராக 12:55 க்கு மணி அடிக்கும். அப்புறம் 1 மணிக்கு திரும்பவும் மணி அடிக்கும்.

வேலையை ஆரம்பிக்கலாம். இடையில் மறுபடியும் ஒரு டீ பிரேக், தம் என்று போகும். R&D மீட்டிங், குழு மீட்டிங் என வாரத்துல ஒரு நாள் ஓடிடும்.
இந்த மீட்டிங்குகள் காலை 10 முதல் மாலை 3 மணி வரை தான் நடக்கும். இதான் முக்கியமான வேலை நேரமும் கூட.

4 மணிக்கு அன்றைய வேலைகளை முடிச்சுட்டு வீட்டுக்கு போக தயாராக மணி அடிக்கும். நாம் தயாராகிக்கலாம். 4:30 மணிக்கு மணி அடிக்கும் போது நாம ID கார்டை பஞ்ச் பண்ணிட்டு, யூனிஃபார்மை அங்கேயே கழட்டி போட்டுட்டு வந்துடலாம். அவங்களே துவைத்து வைப்பார்கள்.. காலையில் 8 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை இப்படித்தான் மாலை 4:30 க்கு மணிக்கு முடியும். 7:30 மணி நேரம் வேலை, 1 மணி நேரம் உணவு இடைவேளை, இரண்டு தேநீர் இடைவேளை என அன்றைய நாள் முடிஞ்சது.

முன்னாடி சொன்ன மாதிரி 10 am to 3 pm முக்கியமான டைம். மற்றபடி காலையில் 8 மணிக்கு போயிட்டு சாலை 4:30 மணிக்கு திரும்பலாம். அல்லது 8:30, 9, 9:30 னு 10 மணிக்குள்ள போயிட்டு 7:30 மணி வேலை நேரத்த முடிச்சிட்டு மாலை 5, 5:30, 6 னு வீடு திரும்பலாம். இது R&D, QA, HR ல இருக்கவங்களுக்கு. உற்பத்தில இருக்கவங்களுக்கு 3 ஷிப்ட் , வாரம் ஒரு ஷிப்ட் என சைக்கிளாக போகும்.

இப்போது ஓவர் டைம் யாருக்கானது என்று பாப்போம். கிளை மேளாளர், செக்சன் தலைவர், துறை தலைவர், துறை மேளாளர் என யாருக்கும் ஓவர் டைம் சம்பளம் இல்ல. ஆனா இவங்க பெரும்பாலும் 2 மணி நேரம் கூடுதலா வேலை செய்வாங்க. துறை தலைவரோ துறை மேளாளரோ காலையில் ஒரு மணி நேரம் முன்னாடி வந்துடுவார். அன்னைக்கு விடுப்பு யாரு, பிளக்ஸ் டைம் யார் என்று முன்னாடி நாள் சொல்லனா அன்னைக்கு காலைல இவங்க கிட்ட சொல்லிவிடவேண்டும்.

மத்தவங்களுக்கு ஒரு நாளைக்கு 2 மணி நேரம் அல்லது மாசத்துக்கு 45 மணி நேரம் தான் ஓவர் டைம் செய்ய அனுமதி. நான் சம்பந்தப்பட்ட இரண்டு துறையிலும் 7:30 மணி நேரம் வேலை முடிஞ்ச உடனே பையை தூக்கிட்டு கிளப்பத்தான் பாக்கறாங்க. ஜூலை 1 முதல் புது விதி வந்தது. அதாவது மதியம் உணவு உடைவேளைக்குப்பின் 1 மணிக்கு வேலை தொடங்கினால் மாலை 6 மணிக்கு மேல செய்யக்கூடாது என்ற விதி. ஒருவரால் தொடர்ந்து 6 மணி நேரம் வேலை செய்ய முடியாது, கூடாது என்ற அளவீடு வந்திருக்கிறது. அதை நடைமுறைப்படுத்திட்டாங்க. இந்த நடைமுறைப்படி 8 மணிக்கு வேலை ஆரம்பிக்கறவங்க ஒரு நாளைக்கு 1:30 மணி நேரம் தான் ஓவர் டைம் பார்க்க முடியும்.

jobs job japan

இங்க இருக்கும் எல்லா உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும் ஹாட் பாதர் என்றால் அது டொயோடா தான். இந்த பணியாளர் சார்ந்த எந்தவொரு கொள்கை முடிவும் முதலில் நடைமுறைப்படுத்துவது டொயோடா தான். மற்ற தொழிற்சாலைகள் இதனை பின்பற்றியே ஆகவேண்டும். அந்த கட்டாயம் வந்துவிடும். நான் மேல சொன்ன அன்றாட நடைமுறைகள் எல்லாமும் எல்லா உற்பத்தி தொழிற்சாலைகளிலும் பின்பற்றக்கூடிய நடைமுறைகள்.

அப்புறம் மேளாளர், துறை தலைவர் யாரா இருந்தாலும் பணியாளர்களை முடிக்கிலாம் வேலை வாங்க முடியாது. கூடாது. Labor union வலுவானது. Harassment சட்டங்கள் எல்லாமும் வலுவானது. பணி நிரந்தமாகிட்ட வேலையை விட்டுலாம் தூக்கவே முடியாது. நாமளே வேலைய விட்டு போறேன்னாலும் விட மாட்டாங்க. சம்பளம் போக ஏகப்பட்ட ஓய்வூதிய திட்டங்கள், பாதுகாப்புகள் என பட்டியல் நீளம்.

இது இங்குள்ள உற்பத்தி தொழிற்சாலைகளின் நடைமுறை. ஜப்பானின் வேலை நேரம் மாசத்துக்கு 200 மணி நேரம் தான், இது 45 மணி நேர ஓவர் டைம் வேலையையும் உள்ளடக்கியது. ஓவர் டைம் ஒருவரின் தேவை வசதிக்கேற்ப தான் செய்வார்கள். Production ல இருக்கவங்களுக்கு அதிகமான தேவையும் இருக்காது. அடுத்த ஷிப்ட் ஆட்கள் வந்துடுவாங்க. 2-வது 3-வது ஷிப்ட் வேலை செய்றவங்களுக்கு கூடுதல் சம்பளம் அதனால ஓவர் டைம் தேவையும் இவங்களுக்கு இல்லை. IT துறைக்கு இந்த விதிகளெல்லாம் பொருந்த வாய்ப்பில்லை. கடைசியாக முக்கியமான விஷயம்.. கம்பனியோட முதலாளியாகவே இருந்தாலும் தொழிலாளிங்க கூட தொழிலாளியாக வரிசையில் நின்று தான் சாப்பாடு வாங்கி சாப்பிட வேண்டும். அங்க இருக்க ஏதோ ஒரு மேசையில மத்தவங்க கூட மேசைய பகிர்ந்துக்கிட்டு தான் சாப்பிட வேண்டும்" இவ்வாறு ஜப்பான் கம்பெனி வேலைகள் தொடர்பாக முனைவர் கணேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+