அகவிலைப்படி ஓகே.. அரியர் தொகை எப்போது கைக்கு வரும்.. நாடு முழுக்க பல கோடி பேருக்கு இன்ப அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைபடி நிவாரணம் (டிஆர்) 2% உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க பல கோடி ஊழியர்களின் சம்பளம் உயரப்போகிறது. இதோடு அரியர் தொகை தொடர்பான விளக்கமும் தற்போது வெளியாகி உள்ளது. 2% உயர்வு என்பது நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும்.

7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும். ஜூலை-டிசம்பர் 2024 அகவிலைப்படி 3% அதிகரித்து 53% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இதில் மேலும் 2% உயர்த்தப்பட்டு 55% ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

அரியர் தொகை

இதன் மூலம் நாடு முழுக்க பல கோடி ஊழியர்களின் சம்பளம் உயரப்போகிறது. இதோடு அரியர் தொகை தொடர்பான விளக்கமும் தற்போது வெளியாகி உள்ளது. ஜனவரி டூ மார்ச் வரையிலான 3 மாதங்களுக்கு மட்டும் அரியர் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 1080 ரூபாய் வரி இவர்களுக்கு அரியர் தொகை கிடைக்கும்.

ஆனால் 18 மாத அரியர்

இப்படிப்பட்ட நிலையில்தான் விரைவில் 18 மாதங்களுக்கான டிஏ அரியர் விரைவில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தொகையை மத்திய அரசு ஒதுக்க உள்ளதாக கூறப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் வரவில்லை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழுவிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால் இந்த அரியர் இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது .

When will the arrears of Dearness allowance hike will be sent to the employees

சீனியர் ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இதனால் நேரடி பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த காலாண்டிற்கான மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த அகவிலைப்படி உயர்வு 3 சதவிகிதம் இருக்கலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. . சீனியர் ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இதனால் நேரடி பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இன்னும் 10 நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். ஏற்கனவே 50 சதவிகிதமாக உள்ள டிஏ 54 ஆக உயர்ந்துள்ளது.

இதுபோக இன்னொரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.

தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்தது கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.

Take a Poll

அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.

இது போக மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வோடு சேர்த்து எச்ஆர்ஏ உயர்வும் இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போது எக்ஸ், ஒய், இசட் என்று மூன்று பிரிவுகளில் எச்ஆர்ஏ சம்பளம் தரப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+