Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனடாவில் 81 லட்சம் சம்பளம் வாங்கிய இந்திய இளைஞர்.. இலவசத்திற்கு ஆசை.. ஒரு வீடியோவால் வாழ்க்கை காலி

Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: கனடாவில் இலவசமாக ஏழைகளுக்கு போக வேண்டும் என்று வைக்கப்பட்ட உணவு பொருட்களை எடுத்ததுடன், அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டதற்காக வங்கியில் வேலை செய்து வந்த இந்திய வம்சாவளி இளைஞர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அவர் வாங்கும் சம்பளத்தை பொதுவெளியில் போட்டு, அவரது வேலைக்கே உலை வைத்துள்ளனர் சிலர்.


நல்ல வேலை, நல்ல சம்பளம், இப்படியான வாழ்க்கை கிடைக்காதா என்று ஏங்காதவர்கள் யாருமே இல்லை என்கிற அளவிற்கு வாழ்க்கை.. அப்படி இருந்தும், இலவசங்களை எதிர்பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.. அப்படி இலவசங்களுக்கு ஆசைப்பட்ட இளைஞர் கடைசியில் வேலையை இழந்துள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்..

Why Indian-origin youth who took food from a free food bank in Canada were laid off

கனடாவில் TD என்ற வங்கியில் மெஹுல் பிரஜாபதி என்ற இந்திய இளைஞர் பணியாற்றி வருகிறார். இவருடை ஆண்டு சம்பளம் 98,000 டாலர் என்று கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 81 லட்சத்து 66 ஆயிரத்து 756 என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவ்வளவு சம்பளம் வாங்கும் மெஹுல் பிரஜாபதி, கனடாவில் ஏழைகளுக்காக வைக்கப்படும் இலவச உணவுப்பொருட்களை எடுத்து பயன்படுத்தி வந்தாராம்.


கனடாவில் உள்ள லாப நோக்கமற்ற நிறுவனங்கள், அறக்கட்டளை மற்றும் அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மூலம், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இலவச உணவு வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்று தனக்குத் தேவையான உணவு மற்றும் மளிகை பொருள்களை எடுத்துக்கொள்வதாகவும், அதன்மூலம் ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான டாலரை மிச்சப்படுத்துவதாகவும் வங்கி ஊழியர் மெஹுல் பிரஜாபதி வீடியோ வெளியிட்டிருந்தார்.

மேலும் தனது வீடியோவில், இலவச உணவு வங்கியிலிருந்து வாரத்துக்கு தேவையான அளவுக்கு எடுத்துக்கொண்ட உணவுப் பொருள்களை வங்கி ஊழியரான மெஹுல் பிரஜாபதி காட்டியிந்தார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், ஏப்ரல் 21-ம் தேதியன்று தன்னுடைய X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார்.

அந்த பதிவில், வீடியோவில் வரும் இந்த இளைஞர் TD கனடா வங்கியில் தரவு விஞ்ஞானியாகப் (data scientist) பணிபுரிகிறார். இவரின் ஆண்டு வருமானம் 98,000 டாலர். இவர், தொண்டு நிறுவங்களின் இலவச உணவு வங்கியிலிருந்து எவ்வளவு உணவுப் பொருள்களை இலவசமாக எடுத்து பயன்படுத்துகிறேன் என்று பெருமையாக வீடியோ போட்டிருக்கிறார் என்று ட்வீட் போட்டார். இதை பார்த்த நெட்டிசன் பலர், வங்கி ஊழியர் செய்தது தவறு என்று அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.

கனடாவை தாண்டி உலகம் முழுவதும் இந்த பதிவு விவாதத்தை ஏற்படுத்தியது. ஏழைகளுக்கு மற்றும் அவசிய தேவையில் இருப்பவர்களுக்கான தொண்டு நிறுவனங்கள் வைத்துள் இந்த இலவச உணவு ஏடிஎம்மில் இப்படியும் செய்யலாம் என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார். மற்றொரு இணையதளவாசி இது ஒருவிதமான குற்றமல்லவா... உங்களுக்கு தேவையான உணவை பெற தேவையான பணம் உங்களிடம் இருக்கும்போது, இல்லாதவர்களுக்கு தரும் இந்த உதவியையும் நாடுவது சரியில்லையே என்று காட்டமாக விமர்சித்தார்.இ ப்படி பலரும் விமர்சித்தனர்.

Why Indian-origin youth who took food from a free food bank in Canada were laid off
Why Indian-origin youth who took food from a free food bank in Canada were laid off

இந்த பதிவு கனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வங்கி ஊழியர் மெஹுல் பிரஜாபதி கடைசியில் வேலையை இழந்துள்ளார். முன்னதாக வீடியோவை வெளியிட்டு அம்பலப்படுத்திய அதே இணையதளவாசி ஏப்ரல் 23-ம் தேதியன்று, உணவு வங்கி கொள்ளைக்காரன் பணிநீக்கம் செய்யப்பட்டார்' என்று சம்பந்தப்பட்ட வங்கியின் மின்னஞ்சல் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்டார்,

இதை பார்த்த நெட்டிசன்கள், இந்திய வம்சாவளி இளைஞர் செய்தது தவறு தான். ஆனால் அவர் வேலையில்லாமல் இனி என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை... பாவம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இலவச உணவுப்பொருட்களை எடுத்து பயன்படுத்தியது தவறல்ல.. என்ற போதிலும், வீடியோ போட்டதால், கடைசியில் சிக்கி வேலையை இழந்துள்ளார் இந்திய வம்சாவளி இளைஞர். இந்த விவகாரம் சமூக வலைதங்களில் கடந்த 4 நாட்களாக பேசுபொருளாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+