Remote ஆப்ஷனுடன் ஐடி வேலை.. அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணி.. அழைக்கும் ஐடி நிறுவனம்
சென்னை: Winfrox ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
தற்போது பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை அலுவலகம் வரவழைத்து வேலையாற்ற வைக்கின்றனர். இருப்பினும் சில நிறுவனங்களில் Hybrid மாடல் பணி உள்ளது. இதன்மூலம் வாரத்தில் 2 நாட்கள் வரை அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும்.

அதேவேளையில் சில நிறுவனங்கள் மட்டுமே இன்னும் கூட பணியாளர்களை வீட்டில் இருந்த வேலை செய்ய அனுமதிக்கின்றனர். அந்த வகையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனம் தான் Winfrox.
இந்த வின்ஃப்ராக்ஸ் ஐடி நிறுவனத்தில் ஃப்ரண்ட் எண்ட் டெவலப்பர் (Frontend Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வாகும் நபர்கள் ஜுனியர் ஃப்ரண்ட் எண்ட் டெவலப்பராக நியமனம் செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 0-3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் இல்லாமல் இருப்பவர்கள் குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
அதன்படி விண்ணப்பத்தாரர்கள் இளங்கலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட் உள்ளிட்டவற்றை நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஃப்ரண்ட்எண்ட் ஃப்ரேம்வொர்க்ஸ்களான React, Vue அல்லது Angular நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
Git அனுபவம் கொண்டிருக்க வேண்டும். வெப் டிசைன் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இது Remote வகை பணியாகும். இதனால் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்ல வேண்டாம்.விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications