லட்சத்தில் சம்பளம் + போனஸ்.. பிரபல ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வேலை.. பிப்ரவரி 28 ம் தேதி கடைசி நாள்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 28 ம் தேதி கடைசி நாளாகும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை சம்பளத்துடன் போனசும் வழங்கப்பட உள்ளது.
விப்ரோ அல்லது விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies) என அழைக்கப்படும் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

விப்ரோ நிறுவனத்தில் Elite - Telecom, Automotive, Embedded & CPPE (Security, Java Full Stack) FY 25 என்ற பெயரில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 2023, 2024ம் ஆண்டில் பிஇ, பிடெக் பிரிவில் மெக்கானிக்கல் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன் அல்லது ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இசிஇ அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் சைபர் செக்யூரிட்டி படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
குறிப்பாக இன்ஜினியரிங்கை பொறுத்தவரை 60 சதவீதம் அல்லது CGPA 6.0 என்ற அளவு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு அரியர் என்பது இருக்கலாம். இருப்பினும் பணிக்கு தேர்வாவதற்குள் அதனை கிளியர்செய்ய வேண்டும். இதுதவிர விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் 60 சதவீத அல்லது அதற்கு அதிக மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளிக்கு செல்லாமல் Open School அல்லது Distance Education என்பது 10, பிளஸ் 2-வுக்கு மட்டுமே பொருந்தும்.
சம்பளமாக ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் கிடைக்கும். அதன்படி பார்த்தால் மாதம் ரூ.29,166 சம்பளமாக கிடைக்கும். பணிக்கு சேர்ந்த பிறகு 6 மாதம் கழித்து போனஸாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். ஆண்டுதோறும் Increments இருக்கும். Merge Bonuses என்பது பணிக்கு சேர்ந்ததில் இருந்து 18, 24, 36வது மாதங்களில் இருக்கும். ஆனால் இந்த பணிக்கு 12 மாத Service Agreement என்பது உள்ளது. இதனை மீறி 12 மாதத்துக்குள் பணியை விட்டால் விப்ரோ நிறுவனத்துக்கு ரூ.75 ஆயிரம் செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது 3 ரவுண்ட்டுகளாக நடக்கும். முதல் ரவுண்ட்டில் ஆன்லைன் அசஸ்மெண்ட்-டில் Aptitude Test, Written Communication Test, Online Programming Test இருக்கும். இதில் Coding Test-ல் விண்ணப்பதாரர்கள் Java, C, C++ அல்லது பைத்தான் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். 2வது ரவுண்ட் என்பது Business Discussion, 3வது ரவுண்ட் என்பது HR Discussion ஆக இருக்கும்.
இந்த பணிக்கு பிப்ரவரி 28 ம்தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதோடு விண்ணப்பத்தாரர்கள் கடந்த 3 மாதத்தில் விப்ரோவில் எந்த இண்டர்வியூவிலும் பங்கேற்று இருக்க கூடாது. அப்படி இண்டர்வியூவில் பங்கேற்று இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு PAN INDIA வேலையாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படலாம். இதனால் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications