அசத்தலான சம்பளம்.. பிரபல ஐடி நிறுவனத்தில் சூப்பர் பணி.. சென்னையிலேயே நியமனம்
கோவை: விப்ரோ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் செயல்பட்டு வரும் விப்ரோவில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் விப்ரோவும் (Wipro) ஒன்று. தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் இயங்கி வரும் விப்ரோ நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி சென்னை விப்ரோ நிறுவனத்தில் டிரெய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதாவது டெக்னிக்கல் கிராசூவேட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இந்த ஆண்டு பிஇ, பிடெக்-கில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, இசிஇ பிரிவுகளில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் எம்சிஏ படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் Manual Testing-ல் பிரிவில் பணியாற்ற வேண்டி இருக்கும். இதனால் விண்ணப்பம் செய்வோருக்கு சாப்ட்வேர் டெவலப்மென்ட் லைப்ஸ்டைல் (எஸ்டிஎல்சி) பிரின்சிபிள்/கான்செப்ட் தெரிந்திருக்க வேண்டும். சிஸ்டம் டெஸ்ட்டிங், அடிப்படை டேட்டாபேஸ் கான்செப்ட்ஸ்களான Table Relationships, Keys, SQL மற்றும் DBS Queries உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
அதோடு ஆங்கிலத்தில் நன்கு எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பிரிட்டன் நேரப்படி பணி செய்ய வேண்டி இருக்கும். வாரம் 5 நாட்கள் மட்டுமே பணி நாட்களாகும். 2 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பின்படி மாதசம்பளம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாதம் கம்பெனி விதியின்படி நல்ல சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விப்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லதாகும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications