IT Jobs: அனுபவம் தேவையில்லை.. Wipro அலுவலகத்தில் வேலை ரெடியா இருக்கு.. சென்னையிலேயே இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விப்ரோ அலுவலகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. 2024 மற்றும் 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். சென்னையில் இண்டர்வியூ நடத்தி அங்கேயே பணி நியமனம் செய்யப்பட உள்ளது.

நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக விப்ரோ (Wipro) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது டிரெய்னி (Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

wipro-hiring-for-trainee-role-in-chennai-2025

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய அனுபவம் தேவையில்லை. அதேவேளையில் விண்ணப்பத்தாரர்கள் பிஇ, பிடெக், எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை 2024, 2025-ம் ஆண்டில் முடித்திருக்க வேண்டும். அதேபோல் எஸ்டிஎல்சி, எஸ்ஏஎஸ் மற்றம் மெயின் ஃபிரேம்ஸ் பிரின்சிபிள்/கான்செப்ட்டுகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் SQL Queries தெரிந்திருக்க வேண்டும். ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங் தெரிந்திருக்க வேண்டும். சிஸ்டம் டெஸ்ட்டிங் மற்றும் சாப்ட்வேர் குவாலிட்டி அசூரன்ஸ் மற்றும் மெத்தடாலஜிஸ் தெரிந்திருக்க வேண்டும். டேட்டாபேஸ் கான்செப்ட்டுகளான table relationships, keys, SQL, DB2 Queries உள்ளிட்டவை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பணிகளை சொந்த பணி போல் செய்ய வேண்டும். டீம் பிளேயராகவும், தனியாகவும் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

மேலும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு 12 மாத சர்வீஸ் அக்ரிமென்ட் உள்ளது. அதாவது கட்டாயமாக அந்த நிறுவனத்தில் 12 மாதங்கள் வரை பணியாற்ற வேண்டும். பணி நாட்களில் ஒன்பது அரை மணிநேரம் வேலை இருக்கும். ஷிப்ட் என்பது மாலை 5.30 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இருக்கும். இண்டர்வியூ Face to Face முறையில் இருக்கும்.

விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூ தொடர்பான விவரங்கள் இ-மெயில் அல்லது தொலைபேசி மூலமாக தெரிவிக்கப்படும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+