டிப்ளமோ முடித்தவருக்கு விப்ரோவில் வேலை.. நவ. 15 கடைசி நாள்.. சம்பளத்துடன் பிடெக் படிப்பும் ‛ப்ரீ’
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான விப்ரோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு நவம்பர் 15ம் தேதி விண்ணப்பம் செய்வது கடைசி நாளாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மாத சம்பளம் வழங்கப்படுவதுடன் ‛பிடெக்' படிப்பை பயிலவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் முக்கியமான ஐடி நிறுவனமாக விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போது விப்ரோவில் School of IT infrastructure Management - 2024 என்ற அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு முடித்து டிப்ளமோ படிப்பை 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்ணுடன் 2023, 2024 படிப்பை முடித்தவர்களும், 2025ம் ஆண்டில் படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோர் தொலைத்தூர கல்வி மூலம் 10, 12ம் வகுப்பு படித்திருக்கலாம் ஆனால் டிப்ளமோவை பார்ட் ஃடைம், தொலைத்தூர கல்வி மூலம் முடித்திருக்க கூடாது. கண்டிப்பாக கல்லூரி சென்று டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும். அதுமட்டுமின்றி டிப்ளேமாவில் கண்டிப்பாக கணிதத்தை ஒரு பாடத்தை படித்திருக்க வேண்டும்.
ஆனாலும் பிசினஸ் கணிதம், அப்ளைட் கணிதம் உள்ளிட்டவை கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. டிப்ளமோ படிப்பை பொறுத்தவரை கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஆண்டு மாத சம்பளமாக ரூ.12,400, 2ம் ஆண்டு ரூ.15,488, 3ம் ஆண்டில் ரூ.17,553, 4வது ஆண்டில் ரூ19,918 வழங்கப்படும். இந்த சம்பளம் என்பது Stipend முறையில் வழங்கப்படும். இதுதவிர பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பிடெக் படிப்பை படிக்க விப்ரோவில் இருந்து ஸ்பான்ஷர்ஷிப் வழங்கப்படுகிறது. இதற்கு தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை. படிப்புக்கான செலவு முழுவதும் விப்ரோ நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். விப்ரோவில் பணியாற்றி கொண்டே பிடெக் படிப்பை இலவசமாக முடிக்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது நவம்பர் 15ம் தேதி நள்ளிரவு 11.59 மணியாகும். தகுதி உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் 4 ரவுண்ட்டுகள் பிறகு தேர்வு செய்யப்பட உள்ளனர். முதலில் ஆன்லைன் அசஸ்மென்ட் என்ற வகையில் தலா 20 நிமிடங்கள் என்று மொத்தம் 80 நிமிடங்கள் வரை முதல் ரவுண்ட் நடக்கும்.
இதில் முதலில் Verbal, 2வது Analytical, 3வது Quantitative, 4வது Written Communication ஆகியவை இருக்கும். அடுத்ததாக 2வது ரவுண்ட்டில் Bussiness Discussion, 3வது ரவுண்ட்டில் எச்ஆர் டிஸ்கஷன், 4வது ரவுண்ட்டில் Free Skill Agreement இருக்கும். சர்வீஸ் அக்ரிமென்ட் என்பது மொத்தம் 48 மாதங்களாகும். அதாவது மொத்தம் 4 ஆண்டுகள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 4 ஆண்டு கட்டாயம் பணி செய்ய வேண்டும். அதற்கு முன்பு பணியை விடும் பட்சத்தில் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications