பணி + சம்பளம் + பிடெக் படிக்க ‛ஃப்ரீ’ உதவி.. டிப்ளமோ முடித்தவர்களுக்கு ‛ஜாக்பாட்’.. அழைக்கும் Wipro
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான விப்ரோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்களுக்கு பணி + மாதசம்பளம் மட்டுமின்றி பிடெக் பயிலவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies) ஐடி நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு கிளைகளில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணி குறித்த முழு விபரம் வருமாறு:

கல்வி தகுதி: இந்த பணிக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு முடித்து டிப்ளமோ படிப்பை 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்ணுடன் 2023, 2024ம் ஆண்டில் முடித்தவர்களும், 2025ம் ஆண்டில் முடிக்க போகிறவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
டிப்ளமோ படிப்பை பொறுத்தவரை கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இதில் 10ம் வகுப்பு முதல் டிப்ளமோ படிப்புக்கு இடையே 3 ஆண்டு காலஇடைவெளி என்பது இருக்கலாம். டிப்ளமோவை முழுமையாக படித்து இருக்க வேண்டும். தொலைத்தூர கல்வி மூலம் 10, 12ம் வகுப்பு படித்திருக்கலாம் ஆனால் டிப்ளமோவை பார்ட் ஃடைம், தொலைத்தூர கல்வி மூலம் முடித்திருக்க கூடாது.
அதுமட்டுமின்றி டிப்ளேமாவில் கண்டிப்பாக கணிதத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். பிசினஸ் கணிதம், அப்ளைட் கணிதம் உள்ளிட்டவை கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. கடைசி ஆண்டு படிப்போர் என்றால் அதிகபட்சமாக ஒரு அரியர் என்பது இருக்கலாம். ஆனாலும் அதனை கல்லூரி முடிவதற்கு முன்பாக முடிக்க வேண்டும்.
மாத சம்பளம் + படிப்பு: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஆண்டு மாத சம்பளமாக ரூ.12,400, 2ம் ஆண்டு ரூ.15,488, 3ம் ஆண்டில் ரூ.17,553, 4வது ஆண்டில் ரூ19,918 வழங்கப்படும். இந்த சம்பளம் என்பது Stipend முறையில் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பிடெக் படிப்பை படிக்க விப்ரோவில் இருந்து ஸ்பான்ஷர்ஷிப் வழங்கப்படுகிறது. இதற்கு தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை. விப்ரோவில் பணியாற்றி கொண்டே பிடெக் படிப்பை இலவசமாக முடிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி: இந்த பணிக்கு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் விப்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். முடிந்த வரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் 4 ரவுண்ட்டுகளுக்கு பிறகு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இண்டர்வியூ: முதலில் ஆன்லைன் அசஸ்மென்ட் என்ற வகையில் தலா 20 நிமிடங்கள் என்று மொத்தம் 80 நிமிடங்கள் வரை முதல் ரவுண்ட் நடக்கும். இதில் முதலில் Verbal, 2வது Analytical, 3வது Quantitative, 4வது Written Communication ஆகியவை இருக்கும். அடுத்ததாக 2வது ரவுண்ட்டில் Bussiness Discussion, 3வது ரவுண்ட்டில் எச்ஆர் டிஸ்கஷன், 4வது ரவுண்ட்டில் Free Skill Agreement இருக்கும். சர்வீஸ் அக்ரிமென்ட் என்பது மொத்தம் 48 மாதங்களாகும். அதாவது மொத்தம் 4 ஆண்டுகள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 4 ஆண்டு கட்டாயம் பணி செய்ய வேண்டும். அதற்கு முன்பு பணியை விடும் பட்சத்தில் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications