Wipro-வில் பணி.. சம்பளம் + போனஸ் + எம்டெக் படிக்க ஸ்பான்ஷர்ஷிப்.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான விப்ரோவில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளம், போனஸ் வழங்கப்பட உள்ளது. மேலும் வேலை செய்து கொண்டே அந்த நிறுவனத்தின் ஸ்பான்ஷர்ஷிப்பில் எம்டெக் படிக்க முடியும். இந்த பணிக்கு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies)ஒன்று. இந்த நிறுவனம் பெங்களூரில் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் விப்ரோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

it job job jobs

தற்போதைய அறிவிப்பின்படி விப்ரோ நிறுவனத்தில் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், எக்ட்ரானிக்ஸ் மற்றும் இயற்பியல் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் டிகிரி படிப்பின்போது கண்டிப்பாக ஒரு பாடத்தை Core Mathematics-ஆக படித்திருக்க வேண்டும். இருப்பினும் Business Maths & Applied Matheatics பாடங்கள் இதில் வராது. மேலும் பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் விப்ரோ நிறுவனத்தின் ஸ்பான்ஷர்ஷிப்பில் எம்டெக் படிப்பை படிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10, 12ம் வகுப்பு முடித்து டிகிரி படித்திருக்க வேண்டும். குறிப்பாக டிகிரி படிப்பில் 60 சதவீத மதிப்பெண் அல்லது 6.0 CGPA வைத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஆண்டு மாதம் ரூ.15,488 சம்பளமாக வழங்கப்படும். அதன்பிறகு 2வது ஆண்டு 17,553, மூன்றாவது ஆண்டு 19618, 4வது ஆண்டு ரூ.23 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் கூடுதலாக போனஸ் வழங்கப்பட உள்ளது. அதன்படி Joining Bonus ஆக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

ஆனால் இதில் ஒரு பெரிய ட்விஸ்ட் உள்ளது. அதாவது பணிக்கு தேர்வாகும் நபர்கள் 60 மாதம் சர்வீஸ் (5 ஆண்டு) அக்ரிமென்ட் செய்து கொள்ள வேண்டும். இதனால் பணியை விட்டு 5 ஆண்டுக்குள் நிற்கும்போது அவர்கள் கட்டாயம் விப்ரோ நிறுவனத்துக்கு Joining Bonus on Pro Rata basis-ல் திரும்ப செலுத்த வேண்டும். விண்ணப்பம் செய்வோர் இதனை கட்டாயம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

இந்த பணிக்கு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் விப்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். முடிந்த வரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் 3 ரவுண்ட்டுகள் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல் ரவுண்ட்டின் பெயர் Online Assessment. இதில் Verbal-ல் 20 கேள்வி, Analytical-ல் 20 கேள்வி, Quantitative-ல் 20 கேள்விகள் கேட்கப்படும். மேலும் Written Communication-ல் 20 நிமிடங்கள் வரை நடைபெறும். ரவுண்ட் 2வில் பிசினஸ் டிஸ்கசன், ரவண்ட் 3ல் எச்ஆர் டிஸ்கஷன் இருக்கும். இந்த 3 ரவுண்ட்டிலும் செலக்ட் ஆவோர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+