Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாயினிங் போனஸ் ரூ.75,000 + சம்பளம் + எம்டெக் வாய்ப்பு! பிசிஏ, பிஎஸ்சி முடித்தோரை அழைக்கும் விப்ரோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: விப்ரோ ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு சேரும் போதே ரூ.75 ஆயிரம் போனஸாக கிடைக்கும். அதோடு பணியின்போதே எம்டெக் படிப்பை படிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? மாதசம்பளம் என்ன? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:

விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies).. நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. விப்ரோவில் அடிக்கடி காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய பணி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

it job job jobs

தற்போதைய அறிவிப்பின்படி விப்ரோ நிறுவனத்தில் Wipro's Work Intergrated Learning Program (WILP) -2024 என்ற பெயரில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இயற்பியல் படிப்பை 2023, 2024ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு, பிளஸ் 2 படிப்புக்கு பிறகு டிகிரி படிப்பை 60 சதவீத மதிப்பெண் அல்லது 6.0 CGPA என்று முடித்திருக்க வேண்டும்.

மேலும் சில கண்டிஷன்கள் உள்ளன. அதாவது டிகிரி படிப்பை கண்டிப்பாக கல்லூரியில் படித்திருக்க வேண்டும். 10, பிளஸ் 2 படிப்பை வேண்டுமானால் தொலைதூர கல்வி மூலம் படித்திருக்கலாம். ஒரு அரியர் இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் பணிக்கு தேர்வாவதற்குள் அதனை முடித்திருக்க வேண்டும்.அதேபோல் டிகிரி படிப்பின்போது கண்டிப்பாக ஒரு பாடத்தை Core Mathematics-ஆக படித்திருக்க வேண்டும்.

இருப்பினும் Business Maths & Applied Mathematics பாடங்கள் இதில் வராது. பள்ளி படிப்பில் இடைவெளி என்பது இருக்கலாம். ஆனால் கல்லூரி படிப்பில் இடைவெளி என்பது இருக்கவே கூடாது. மேலும் பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் விப்ரோ நிறுவனத்தின் ஸ்பான்ஷர்ஷிப்பில் எம்டெக் படிப்பை படிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Joining Bonus ஆக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் சம்பளம் என்பது Stipend முறையில் வழங்கப்பட உள்ளது. அதன்படி முதல் ஆண்டு Stipend ஆக ரூ.15,488 வழங்கப்படும். 2வது ஆண்டு ரூ.17,553, மூன்றாவது ஆண்டு ரூ.19,618, 4வது ஆண்டு ரூ.23 ஆயிரம் வரை வழங்கப்படும். மேலும் கூடுதலாக போனஸ் வழங்கப்பட உள்ளது.

இது தவிர ஒரு சிக்கல் உள்ளது. அதாவது பணிக்கு தேர்வாகும் நபர்கள் 60 மாதம் சர்வீஸ் (5 ஆண்டு) அக்ரிமென்ட் செய்து கொள்ள வேண்டும். இதனால் பணியை விட்டு 5 ஆண்டுக்குள் நிற்கும்போது அவர்கள் கட்டாயம் விப்ரோ நிறுவனத்துக்கு Joining Bonus on Pro Rata basis-ல் திரும்ப செலுத்த வேண்டும். விண்ணப்பம் செய்வோர் இதனை கட்டாயம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

இந்த பணிக்கு நவம்பர் மாதம் 15ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் 3 ரவுண்டுகள் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல் ரவுண்டின் பெயர் Online Assessment. இதில் Verbal-ல் 20 கேள்வி, Analytical-ல் 20 கேள்வி, Quantitative-ல் 20 கேள்விகள் கேட்கப்படும். மேலும் Written Communication-ல் 20 நிமிடங்கள் வரை நடைபெறும். ரவுண்ட் 2வில் பிசினஸ் டிஸ்கசன், ரவண்ட் 3ல் எச்ஆர் டிஸ்கஷன் இருக்கும். இந்த 3 ரவுண்ட்டிலும் செலக்ட் ஆவோர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+