‛‛வீட்டில் இருந்தே வேலை’’.. +2, டிகிரி முடித்தவர்களுக்கு அமேசானில் அசத்தலான வேலை.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: பிரபலமான அமேசான் நிறுவனம் சார்பில் வீட்டில் இருந்தே பணி செய்வதற்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 12ம் வகுப்பு அல்லது டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.38 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
ஆன்லைன் வர்த்தகம், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்து செயல்பட்டு வருகிறது அமேசான் நிறுவனம். இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் கிளைகள் இந்தியா உள்பட பல நாடுகளில் உள்ளது. நம் நாட்டை பொறுத்தவரை தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இதன் கிளைகள் உள்ளன. சென்னையை பொறுத்தவரை பெருங்குடியில் அமேசான் நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் அமேசான் நிறுவனத்தில் வீட்டில் இருந்தே பணியாற்றும் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தற்போதைய அறிவிப்பின்படி கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் ரோலில் Virtual Customer Support Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 12ம் வகுப்பு அல்லது டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம். வீட்டில் இன்டர்நெட் வசதி இருக்க வேண்டும். இன்டர்நெட் வசதியை பொறுத்தமட்டில் 20 எம்பி டவுன்லோட் ஸ்பீடு, 8 எம்பி அப்லோட் ஸ்பீடில் இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ், பென்சன் வசதி, இன்டர்நெட் அலோவன்ஸ், திறமையை வளர்த்து கொள்ள எக்ஸ்பர்ட் மூலம் பயிற்சியும் அளிக்கப்படும். இந்த பணி என்பது ஷிப்ட் அடிப்படையிலானது. இரவு ஷிப்ட்டும் உண்டு. வாரம் 40 மணிநேரம் வரை பணியாற்ற வேண்டி இருக்கும். சில சமயங்களில் கூடுதல் நேரங்களும் பணியாற்ற வேண்டியிருக்கும். அப்படி கூடுதல் நேரம் பணியாற்றினால் அதற்கு ஏற்ப சம்பளம் என்பது கணக்கீட்டு வழங்கப்படும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் கூட மாதம் ரூ.38 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications