Work from Home.. வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.. அமேசான் முக்கிய அறிவிப்பு
சென்னை: முன்னணி நிறுவனமான அமேசானில் இருந்து வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து குறைந்தபட்சம் 10 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அமேசான் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இ-காமர்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிமிங், ஏஐ உள்பட பல்வேறு துறைகளில் கால்பதித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நம் நாட்டில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட பல முக்கிய நகரங்களில் அமேசான் அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில் தான் தற்போது அமேசான் நிறுவனத்தில் இருந்து Transportation Representative பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் எக்ஸல் நன்கு தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக Pivot Tables, Vlookups தெரிந்திருக்க வேண்டும். டீமாக சேர்ந்து பணியாற்றும் திறன் இருக்க வேண்டும்.
லாஜிஸ்டிக்ஸ் பேக்கிரவுண்ட்டில் இருந்து வருவோர் மற்றும் Lean/Six Sigma டிரெய்னிங் முடித்திருப்பது, எஸ்க்யூஎல் தெரிந்து வைத்திருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும். மேலும் மேற்குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 10 மாதம் முதல் அதிகபட்சமாக 24 மாதங்கள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போது ஹைதராபாத், உத்தர பிரதேசம், பெங்களூர், சென்னை கொல்கத்தா, மும்பை, சண்டிகர் உள்ளிட்ட நகரங்களை மையப்படுத்தி ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பணி என்பது Virtual முறையில் இருக்கும். இதனால் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசிகட்ட இண்டர்வியூவி தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான இறுதி தேதி அறிவிப்பில் இல்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம் என்பதால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications