வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் செல்ல வேண்டாம்.. HCL நிறுவனத்தில் செப்., 27ல் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணி செய்யலாம். இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 27 ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்துக்கு முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில் தான் தற்போது ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் எச்சிஎல் அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

work-from-home-hcl-walk-in-drive-for-sap-basis-with-remote-opportunity

அதன்படி SAP Basis பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இளநிலை, முதுநிலை பிரிவில் இன்ஜினியரிங் மற்றமு் கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு கஸ்டமர் கம்யூனிகேஷன் நன்றாக இருக்க வேண்டும். அதேபோல் பிரசென்டேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இதுதவிர SAP டெக்னாலஜிஸ் பற்றி நன்றி தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Storage, Virtuliazation, hardware, networks உள்ளிட்டவற் பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும்.

RISE உடன் SAP S/4HANA Cloud Private Edition தெரிந்திருக்க வேண்டும். SAP பிசினஸ் டெக்னாலஜி தெரிந்திருப்பதோடு, ஆங்கிலத்தில் சரளமாக உரையாட தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பேசிக்ஸ் அட்மின், டிபி அட்மின், மைக்கிரேஷன்ஸ், அப்கிரேட்ஸ், பிசினஸ் கன்டினுட்டி உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ முதற்கட்டமாக இன்று (செப்டம்பர் 20) நடந்து முடிந்தது. அடுத்தக்கட்டமாக செப்டம்பர் 27 ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம்காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இண்டர்வியூ நடைபெறும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் HCL Tech Hyderabad Office - Advance Business ub An Ascendas IT Park,Building H - 01B, Phase 2 HiTEC City, Hyderabad, Telangana 500 081 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். எதிர்காலத்தில் பணியை பொறுத்து அலுவலகம் அழைக்கப்படலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+