Work From Home.. மாதம் ரூ.35 ஆயிரம் வரை சம்பளம்.. ஐடி நிறுவனம் தரும் சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றி மாதம் குறைந்தபட்சம் ரூ.22 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரையிலான சம்பளத்தை பெறலாம். விண்ணப்பம் செய்வோருக்கு பணி அனுபவம் என்பது தேவையில்லை. இதற்கான அறிவிப்பை ஐடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

தற்போதைய சூழலில் பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகம் வரவழைத்து வேலை வாங்கி வருகிறது. சில நிறுவனங்கள் மட்டுமே வீட்டில் இருந்து பணியாற்றும் வகையில் Work From Home வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன.

it jobs jobs job

அந்த வகையில் Brewappsn என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின் முழுவிவரங்கள் வருமாறு: Brewappsn நிறுவனத்தில் தற்போது ஜுனியர் வெப் டெவலப்பர் (Junior Web Developerr) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்த அறிவிப்பு என்பது Freshers-களை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பம் செய்யும் பணி அனுபவம் இல்லாதவர்களுக்கு அதிக முக்கியத்துவம் என்பது கொடுக்கப்படும். இருப்பினும் விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் என்பது இருக்க வேண்டும். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு எச்டிஎம்எல் (HTML) நன்கு தெரிந்திருக்க வேண்டும். சிஎஸ்எஸ்(CSS) மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் (Java Script) ஆகியவை நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் வெப் டெவலப்மென்ட் பற்றிய அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறமை இருக்க வேண்டும்.

புதிய டெக்னாலஜி பற்றி கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.22 ஆயிரமும், அதிகபட்சம் என்றால் ரூ.35 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படும். இது ஒரு வொர்க் ப்ரம் ஹோம் ஜாப்பாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை. வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.

இந்த பணிக்கான அறிவிப்பில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி என்பது முடிவுக்கு வரலாம். எனவே இந்த பணியை விரும்புவோர் உடனடியாக Brewappsn நிறுவனத்தின் இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+