வீட்டில் இருந்தே வேலை.. ரூ.6 லட்சம் வரை சம்பளம்.. முன்னணி ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்த கைநிறைய சம்பளத்துடன் வேலை செய்ய பலருக்கும் விருப்பம் உள்ளது. இத்தகைய வாய்ப்பு தேடுவோருக்கு என்றே பிரத்யேகமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஐடி நிறுவனம் ஒன்று. அந்த ஐடி நிறுவனம் என்ன? எந்த மாதிரியான ரோலுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்? என்பது பற்றிய முழு விவரம் வருமாறு:

கொரோனா பரவல் சமயத்தில் பல ஐடி நிறுவனங்களும் ‛வொர்க் ஃப்ரம் ஹோம்' ஆப்ஷனை தங்களின் ஊழியர்களுக்கு வழங்கியது. இப்போது மீண்டும் ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைத்து பணி செய்ய வைத்து வருகின்றன பல ஐடி நிறுவனங்கள்.

it jobs jobs job

இருப்பினும் சில நிறுவனம் வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையிலான வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. இந்த லிஸ்ட்டில் இருக்கும் ஒரு நிறுவனம் தான் Innovate Solutions.

இந்த நிறுவனம் பெங்களூரில் செயல்பட்டு வரும் சூழலில் Work From Home முறையில் வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பின்படி தற்போது பைத்தான் டெவலப்பர் டிரெய்னி (Python Developer Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு இளநிலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது அதுசார்ந்த பிரிவுகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் பைத்தான் புரோகிராமிங் மற்றும் ஆப்ஜெக்ட் ஒரியண்டட் கான்செப்ட் பற்றிய அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.

பிரேம்வொர்க்ஸ்களாக உள்ள Django or Flask தெரிந்திருந்தால் விண்ணப்பம் செய்வோருக்கு அது பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும். மேலும் டேட்டாபேஸஸ் MySQl, PostgreSQL, MongoDB உள்ளிட்டவை பற்றிய புரிதல் என்பது இருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

அதேபோல் நல்ல கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், டீமாக ரே்ந்து பணியாற்றும் திறமை உள்ளிட்டவை இருக்க வேண்டும். புதிய டெக்னாலஜியை கற்று கொள்வதில் ஆர்வம் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பயிற்சி மற்றும் மென்டர்ஷிப் வாய்ப்பு தரப்படும். சாப்ட்வேர் டெவலப்மென்ட் பிரிவில் Career Grwth learning வாய்ப்பு என்பது வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பில் ரூ.6 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Innovate நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். இந்த அறிவிப்பு மார்ச் 3ம் தேதி வெளியானது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எது என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் இந்த விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இது ஒரு Remote வகை பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+