‛‛வொர்க் ஃப்ரம் ஹோம்’’ வாய்ப்பு.. அழைக்கும் பிரபல ஐடி நிறுவனம்.. மிஸ் பண்ணாதீங்க.. ரெடியா?
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான லிவென்டஸ் ‛வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையில் பணியாற்ற வாய்ப்பு வழங்கி உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு Liventus நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முழுநேர தொழில்நுட்பம் சார்ந்த சர்வீஸ் மற்றும் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக இது உள்ளது.

குறிப்பாக Custom Software Development மற்றும் Business Process Automation சேவைகளில் இந்த நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் கிளை பெங்களூரில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் லிவென்டஸ் நிறுவனத்தில் சீனியர் ஃபுல் ஸ்டாக் வெப் டெவலப்பர் (Senior Full Stack Web Developer)
பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் என்ஜினியரிங், சாப்ட்வேர் என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் Node, Angular, React, Knockout உள்ளிட்டவற்றில் அறிவை பெற்றிருக்க வேண்டும். .NET, SQL Server, GIT உள்ளிட்டவற்றில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலம் நன்கு பேச வேண்டும். அதோடு பிரச்சனைகளை தீர்க்கும் திறனை கொண்டிருக்க வேண்டும். மேலும் .NET, .NET Core, MVC, C# உள்ளிட்டவற்றுடன் டெவலப்பிங் வெப் அப்ளிகேஷன் துறையில் 5 முதல் 10 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இருப்பினும் கூட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றிய விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் வீட்டில் இருந்தே பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதோடு ஊழியர்களுக்கு குரூப் மெடிக்கிளைம் பாலிசி, பேரன்ட்டல் இன்சூரன்ஸ் கவரேஜ், விபத்து காப்பீடு, பிஎஃப், Gratuity, ஓவர் டைம் போனஸ், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, லாபத்தில் இருந்து பகிரப்படும் Incentives உள்ளிட்டவை வழங்கப்படும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications