Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசு வேலைகளில் சேர மிகப்பெரிய வாய்ப்பு.. தமிழக இளைஞர்களுக்கு 6 மாத இலவச பயிற்சி

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக அரசு போட்டித்தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச உண்டு, உறைவிட பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்களுக்கு 2 நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படும். அதன்படி, வங்கித்தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு, எஸ்.எஸ்.சி. மற்றும் ரயில்வே துறை தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இதில் ஏதேனும் ஒன்றில் மட்டும் மாணவ, மாணவிகள் பங்கேற்க முடியும்.

தமிழக அரசு போட்டித்தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச உண்டு, உறைவிட பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த வருடம் இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற நிறைய மாணவ, மாணவிகள் யூ.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ். தேர்வான நிலையில், இதுபற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

You can apply for training under the Nan Multhavan scheme for railway and bank exams by May 13th

இந்த சூழலில் தான், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி. மற்றும் ரயில்வே தேர்வுகளுக்கு தயாராக விரும்பும் மாணவ, மாணவிகள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு அண்மையில் வெளிவந்துள்ளது.

தமிழக திறன் மேம்பாட்டு கழகம், நான் முதல்வன் திட்டத்தில், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.), ரயில்வே, வங்கிப்பணி ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் தமிழக இளைஞர்களுக்கு 6 மாத இலவச பயிற்சி வழங்கி வருகிறது. இந்த பயிற்சியில் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் மாணவ, மாணவிகள் சேரலாம்.

இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்களுக்கு 2 நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படும். அதன்படி, வங்கித்தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு, எஸ்.எஸ்.சி. மற்றும் ரயில்வே துறை தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இதில் ஏதேனும் ஒன்றில் மட்டும் மாணவ, மாணவிகள் பங்கேற்க முடியும். இத்திட்டத்தின் கீழ் சேர்ந்து பயிற்சி பெற விரும்புபவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் வருகிற 13-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

இதுபற்றி கடந்த வாரம் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் 2023-ல் தொடங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையில், எஸ்.எஸ்.சி, ரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக, 'நான் முதல்வன் SSC மற்றும் RAILWAYS மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை' தொடங்கவுள்ளது. எஸ்.எஸ்.சி மற்றும் ரயில்வே பயிற்சிக்கு 300 நபர்களும், வங்கி பணிகளுக்கு 700 நபர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தப் பயிற்சியில் சேர ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 29 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி, பி.சி, பி.சி.எம், எம்.பி.சி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

இப்பயிற்சிக்கான 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக மே 31 ஆம் தேதி அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி அல்லது SSC cum RAILWAYS தேர்வுக்களுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும்.

இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்துப் பார்த்து, இன்று (ஏப்ரல் 29) முதல் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் மே13 கடைசி தேதியாகும்" இவ்வாறு அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+