சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அருமையான வாய்ப்பு.. அக்.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்து அதன் நிர்வாக இயக்குனர் (பொறுப்பு ) குணசேகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) க.குணசேகரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 2023-24-ம் ஆண்டில் தொழில் பழகுநர்கள் தேர்வு செய்வதற்கு, பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளில் (இயந்திரவியல், தானியங்கியியல்) 2019, 2020, 2021, 2022, 2023 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து இணையதளம் வழியாக (www.boat-srp.com) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் சேர விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 10-ம்தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்." இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

தொழிற் பழகுநர் சட்டம் குறித்து சில தகவல்களை பார்ப்போம்..
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிட்ட அளவு தொழிற் பழகுநர்களை ஈடுபடுத்த வேண்டியது சட்டப்பூர்வமானதாகும். தொழிற் பழகுநர் சட்டத்தின்படி பயிற்சிக்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்த வேண்டியதும் கட்டாயம் ஆகும்.
ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட சுய விருப்பத்தின் பேரில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டாயமாக பணிபுரியும் நிறுவனங்களில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
1. மத்திய அரசு துறைகள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள்
2. மாநில அரசு துறைகள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள்
3. தனியார் நிறுவனங்கள்
தமிழ்நாட்டில் மின்வாரிய கழகம், போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் போன்ற அரசு நிறுவனங்கள் உட்பட 3199 நிறுவனங்களில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் மாநில அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் மூன்று மாநிலத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களில் இத்திட்டத்தினை மாநில தொழிற் பழகுநர் ஆலோசகர் / இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை செயல்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications