‛‛Hybrid முறையில் வேலை’’.. பிரபல ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு.. அழைக்கும் ‛‛ஜீப்ரா’’
சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் ஹைபிரிட் முறையில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஜிப்ரா டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் எனும் ஐடி நிறுவனம் (Zebra Technologies Corporation) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது மொபைல் கம்ப்யூட்டிங் நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள DevOps Engineer II பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
ஜீப்ரா டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் DevOps Engineer II பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இன்ஜினியரிங் அல்லது டெக்னிக்கல் பீல்ட்டில் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். லினக்ஸ் (Linux), விண்டோஸ் (Windows), டாக்கர்ஸ் (Dockers),க்ளோட் பிளாட்பார்ம்ஸ் (Cloud Platforms) உள்ளிட்டற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் ஆன்ட்ராய்டு பற்றியும், மொபைல் கம்ப்யூட்டிங் சாப்ட்வேர், ஜெனரிக் ஹார்ட்வேரான சர்வர்ஸ் (Servers), நெட்வொர்க்கிங் கியர் (Networking Gear), மொபைல் டிவைசஸ்/டேப்லெட்ஸ்/லேப்டாப்ஸ் (Devices/tablets/laptops) வெப் டெக்னாலஜிஸ், டேட்டாபேசஸ், மிடில்வர் (Middleware) பிரேம்வொர்க்ஸ், ஓஎஸ்எஸ் சர்வீர் அண்ட் மொபைல் (Server and Mobile), Virtualization, firewalls உள்ளிட்டவற்றை அறிந்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் புனேவில் நியமனம் செய்யப்படுவார்கள். ஆனாலும் கூட ஹைபிரிட் (Hybrid) முறையில் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் அலுவலகம் செல்லாமல் வீடு அல்லது பிற இடங்களிலும் இருந்தபடி பணி செய்ய முடியும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் மாதசம்பளம் பற்றிய விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் திறமையை பொறுத்து நல்ல சம்பளம் வழங்கப்படும்.
மேலும் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்ய வேண்டும். ஏனென்றால் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிப்பது சிறந்தாகும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications