Zoho-வில் வேலை வேண்டுமா? சென்னையிலேயே ஏராளமான காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிக்க சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் ஜோஹோ ஐடி நிறுவனத்தில் ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஜோஹோவில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள பணி குறித்த விவரம் வருமாறு:

ஜோஹோ ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Java Full stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்ச தகுதிகளாக (Minimum Qualification) சில நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி விண்ணப்பம் செய்வோர் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது அதனுடன் தொடர்புடைய பிரிவில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் சாப்ட்வேர் டெவலப்மென்ட் ரோலில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அனலிட்டிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் திறமை நன்றாக இருக்க வேண்டும்.
மேலும் Preferred Qualification ஆக சில தரப்பட்டுள்ளன. அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா, அங்குலர்(Angular), MySQL மற்றும் Cassandra உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் ஹை வால்யூம் டெவப்பிங் , லோ லேட்டன்சி அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் வெல் டிசைன்ட்ஸ் ரைட்டிங், டெஸ்ட்டபிள் மற்றும் எபிசியன்ட் கோட் உள்ளிட்டவை இருக்க வேண்டும். அதேபோல் CI/CD பைப்லைன்ஸ், ஆட்டோமேஷன் டூல்ஸ் மற்றும் பிராக்டீஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதேபால் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவென்று தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். ஷார்ட்லிஸ்ட் செய்யப்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்டோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம், இடம் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும். இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பங்குச்சந்தையில் வெடிக்கக் காத்திருக்கும் 'ஏஐ' பபுள்? ZOHO ஸ்ரீதர் வேம்புவின் அதிரடி எச்சரிக்கை பின்னணி! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications