ZOHO தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. சென்னையில் பணி நியமனம்.. வெளியான புதிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோவில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழகத்தில் இயங்கும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஜோஹோவும் ஒன்று. தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், தென்காசி உள்பட உள்ளிட்ட நகரங்களில் ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

it jobs zoho job jobs career careers

இந்த நிறுவனத்தில் பணி செய்வது பலருக்கும் கனவாக உள்ளது. இந்த கனவை நனவாக்கும் வகையில் தான் ஜோஹோ நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி ஜோஹோ நிறுவனத்தில் Cloud Operations Engineer பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் லினக்ஸ் ஓஎஸ் (Linux OS), Cloud Infrastructure-ல் Virtualization, Load Balancers உள்ளிட்டவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

வெப் சர்வர்ஸ்களான Apache/Nginx பற்றி அறிந்திருக்க வேண்டும். நெட்வோர்க்கிங் கான்ஸ்செப்ட்டுகளான VLAN, NAT, ARP, Firewall மற்றும் ஸ்வீட்ச் கான்பிகரேஷன் உள்ளிட்டவற்றின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். DNS, DHCP, NTP, Proxy ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும். ஓபன் சோர்ஜ் ஆட்டோமேஷன் டூல்ஸ்களான Puppet மற்றும் Ansible பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

இதுதவிர Shell/Python ஸ்கிரிப்படிங் , சர்வர் ஹார்ட்வேர்களான சிபியூ, RAM, டிரைவ்ஸ், இன்டனல் டிசைன் மற்றும் Saas காம்பேனென்டஸ் RDBMS, NoSQL, Hadoop பற்றி தெரிந்திருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை மற்றும் 24X7 என்ற முறையில் ஷிப்ட் முறையில் பணியாற்றுவதில் விருப்பம் இருக்க வேண்டும்.

தற்போதைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த பணிக்கு குறைந்தபட்சம் ஒன்று முதல் 4 ஆண்டு வேலை அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணி அனுபவம் மற்றும் திறமையின்படி சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படாததால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லதாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+