ZOHO வேலைவாய்ப்பு.. யாருக்கெல்லாம் வாய்ப்பு தெரியுமா? சென்னையில் பணி.. சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோவில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஜோஹோ ஐடி நிறுவனத்தில் பணி செய்வது பலருக்கும் கனவாக இருந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

it jobs job jobs

இந்நிலையில் தான் ஜோஹோ நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போதைய அறிவிப்பின் முழுவிபரம் வருமாறு:

ஜோஹோ நிறுவனத்தில் Cloud Operations Engineer பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பம் செய்ய விரும்புவோர் இந்த பணியில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சமாக 5 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி லினக்ஸ் ஓஎஸ் (Linux OS), Cloud Infrastructure-களில் Virtualization, Load Balancers உள்ளிட்டவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

இன்ஃப்ராஸ்டெக்ச்சர் காம்போனென்ட்ஸ் என அழைக்கப்படும் DNS, DHCP, NTP, Proxy, OS Image Servers, Load Balancers ஆகியவற்றை மேனேஜ்மென்ட் செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஆட்டோமேஷன் மற்றும் பேக்கேஜ் மேனேஜ்மென்ட் பணிகளுக்காக ஓபன் சோர்ஜ் ஆட்டோமேஷன் டூல்ஸ்களான Puppet மற்றும் Ansible பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

வெப் சர்வர்களான Apache/Nginx பற்றி அறிந்திருக்க வேண்டும். நெட்வோர்க்கிங் கான்ஸ்செப்ட்டுகளான VLAN, NAT, ARP, Firewall மற்றும் ஸ்வீட்ச் கான்பிகரேஷன் உள்ளிட்டவற்றின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். அடிப்படை நெட்வொர்க்கிங் கான்செப்ட்ஸ்களான VLAN, NAT, ARP, basic FW உள்ளிட்டவற்றை தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் Shell/Python ஸ்கிரிப்ட் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். சர்வர் ஹார்ட்வேர்களான சிபியூ, RAM, டிரைவ்ஸ், இன்டனல் டிசைன் மற்றும் Saas காம்பேனென்டஸ் RDBMS, NoSQL, Hadoop பற்றி தெரிந்திருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். தற்போதைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின்படி சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. சம்பளம் பற்றிய விபரம் கடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் 24X7 என்ற அடிப்படையில் ஷிப்ட் முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படாததால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லதாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+