ZOHO -வில் வேலை வேண்டுமா? வந்தாச்சு புதிய அறிவிப்பு.. சென்னையில் தான் பணி! நல்ல வாய்ப்பு
சென்னை: ஜோஹோ ஐடி நிறுவனத்தில் கஸ்டமர் சக்சஸ் எக்ஸிக்கியூட்டிவ்ஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. இங்கு பணி செய்வது என்பது பலருக்கும் கனவாக உள்ளது.

இந்நிலையில் தான் சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் ஜோஹோ நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு என்பது அவ்வப்போது வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை ஜோஹோவில் தற்போது கஸ்டமர் சக்சஸ் எக்ஸிக்கியூட்டிவ்ஸ் (Customer Success Executives) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கு ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். அதோடு வேறு நாடுகளை சேர்ந்தவர்களுடன் சரளமாக உரையாடும் திறன் இருக்க வேண்டும். கஸ்டமர் சக்சஸ் ரோல்ஸில் 2 முதல் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எந்த தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பது தொடர்பான விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பம் செய்வோர் Notice period என்பதில் குறைந்தபட்சம் ஒரு மாதம் என்றாவது கொடுப்பது நல்லது.
அதோடு கஸ்டமர் சக்சஸ் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கான மாதசம்பளம் என்ன? என்பது பற்றிய தகவலும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications