ZOHO-வின் அடுத்த வேலைவாய்ப்பு.. தமிழகத்திலேயே பணி செய்யலாம்.. விண்ணப்பிக்க ரெடியா?
சென்னை: தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான தகுதி குறித்த விபரம் மற்றும் விண்ணப்பம் செய்வது எப்படி என்பது பற்றிய விபரம் இங்கே தரப்பபட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், கோவை, தென்காசி உள்ளிட்ட நகரங்களில் ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் எப்படியாவது பணியை பெற்றுவிட வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது.

அதற்கு ஏற்ப அடுத்தடுத்து புதிய பணிகள் குறித்த அறிவிப்புகளை அந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறத. டெக்னிக்கல் சப்போர்ட் என்ஜினியர் பணிக்கு ஜுன் 3ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது புதிய வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி Incident Response Engineer (CSIRT) என்ற பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு Digital Forensics, Security Operations/Engineering, Threat analytics, Security Incident, Event Management Systemes (SIEM) உள்ளிட்டவற்றில் ஒன்று முதல் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
செக்யூரிட்டி டெக்னாலஜிஸ் மற்றும் சிஸ்டம்ஸ் பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும். குறிப்பாக ஃபயர்வால், இன்ட்ரூசன் டிடெக்சன், பிரிவென்சன் சிஸ்டம்ஸ், அன்ட்டி மால்வர் சாப்ட்வேர், அத்தென்டிகேசன் சிஸ்டம்ஸ் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். மேலும் நெட்வொர்க்கிங், இன்ஃப்ராஸ்டக்சர், ஓஎஸ்ஐ லேயர்ஸ், ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் உள்ளிட்டவற்றின் புரோகிராமிங் கான்சென்ப்ட்டுகளை புரிந்து கொள்ளும் திறமை இருக்க வேண்டும்.
மேலும் 24X7 என்ற அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். Cloud and Saas-ல் பணியாற்றிய அனுபவம் இருந்தால் அது கூடுதல் பலமாகும். பணி அனுபவம் மற்றும் திறமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படாததால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லதாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழகத்தில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications